தொழிலதிபரின் பேத்தியை மணக்கிறாரா பிரபாஸ்?
பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் இந்திய சினிமாவின் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது.
பிரபாஸை திருமணம் முடிப்பதற்காக வந்த 6000 பெண்களின் அழைப்பை அவர் நிராகரித்ததாக சமீபத்தில் செய்திகள் எல்லாம் வெளிவந்தன.
இந்நிலையில், மும்பை தொழிலதிபர் ஒருவரின் பேத்திக்கும் பிரபாஸுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. மேலும் பிரபாஸின் திருமணம் அடுத்த வருடம் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் ராசி சிமெண்ட் நிறுவனத்தின் சேர்மன் பூபதிராஜுவின் பேத்திக்கு திருமண பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக மும்பை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.