Instagram ரீல்ஸை கலக்கும் `ஓ மை மாஸ்டர்` - யூடியூபில் 2 மில்லியன் பார்வை
![Instagram ரீல்ஸை கலக்கும் 'ஓ மை மாஸ்டர்' - யூடியூபில் 2 மில்லியன் பார்வை Instagram ரீல்ஸை கலக்கும் 'ஓ மை மாஸ்டர்' - யூடியூபில் 2 மில்லியன் பார்வை](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2022/01/20/209320-pd.jpg?itok=bGd4r_Ba)
பிரபு தேவாவின் ’ஓ மை மாஸ்டர்’ பாடல் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் கலக்கி வருகிறது.
பிரபு தேவா நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் ’மை டியர் பூதம்’. குழந்தைகளை கவரும் வகையில் பேண்டஸி திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் ராகவன் இயக்கியுள்ளார். இவர் மஞ்சப்பை, கடம்பன் ஆகிய படங்களை ஏற்கனவே இயக்கியுள்ளார். அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. பிரபு தேவாவுக்கு ஜோடியாக ரம்பயா நம்பீசன் நடிக்கிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸூக்கு முன்பாக படத்தின் முதல் மோஷன் போஸ்டர் வெளியிட்டப்பட்டது. நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட இந்தப் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பூதம் கெட்டப்பில் இருந்தார் பிரபு தேவா. அடுத்ததாக டிசம்பர் 24 ஆம் தேதி டிரெய்லரும் வெளியிடப்பட்டது. இதுவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியாகியிருந்த ‘ஓ மை மாஸ்டர்’ பாடல் தற்போது யூ டியூப்பில் 2 மில்லியன் பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது.
ALSO READ | 'Me Too' லீலா மணிமேகலை, சின்மயிக்கு நீதிமன்றம் விதித்த தடை
டான்ஸில் வெளுத்து வாங்கியிருக்கும் பிரபுதேவாவின் இந்தப் பாடல் இன்ஸ்டாகிராமிலும் வைரலாகியுள்ளது, குட்டீஸ் முதல் பாட்டீஸ் வரை என அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு இந்தப் பாடலுக்கு நடனமாடி, வீடியோ வெளியிட்டு வருகின்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் வெளியாகவுள்ள பேண்டஸி திரைப்படம் என்பதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.
ALSO READ | வருங்கால மனைவியுடன் குக் வித் கோமாளி புகழ், வைரலாகும் போட்டோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR