அரசு வழங்கிய 5 தேசிய விருதுகளை திருப்பித்தர தயங்க மாட்டேன் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியது:-


கவுரி கொலையை பிரதமரின் ஆதரவாளர்கள் கொண்டாடுவதாக பிரகாஷ்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். இதுபோன்ற விஷயத்தில் மவுனமாக இருக்கும் பிரதமர் மோடி என்னை விட சிறந்த நடிகர் எனவும் விமர்சித்துள்ளார். 


இதுபோன்ற கொடூர சம்பவங்களில் மோடி மவுனமாக இருந்தால், தன்னுடைய 5 தேசிய விருதுகளை திருப்பித்தர தயங்க மாட்டேன் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.