கன்னட இயக்குநர் கேஜிஎஃப் 1 மற்றும் கேஜிஎஃ 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார். யஷ் நாயகனாக நடித்த அந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. குறிப்பாக கேஜிஎஃப் இரண்டாம் பாகம் பான் இந்தியா படமாக வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் வேட்டையை நிகழ்த்தியது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கேஜிஎஃப் பல கோடி ரூபாயை வசூலித்துள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தின் மேக்கிங் ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. இயக்குநர் பிரசாந்த் நீல் கன்னடத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் படங்கலை இயக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் கேஜிஎஃப்  படத்தின் மூன்றாம் பாகமும் உருவாகவிருக்கிறது. அதனையும் பிரசாந்த் நீலே இயக்க, நாயகனாக யஷ் நடிக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே பற்றிய சுவாரஸ்யமான ரகசியங்கள்!


இதற்கிடையே, பிரசாந்த் நீல், பாகுபலியில் நடித்து புகழடைந்த பிரபாஸுடன் இணைந்திருக்கிறார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ்  தயாரிக்கும் இப்படத்துக்கு சலார் என்று பெயரிடப்பட்டுள்ளது.


 



இந்தச் சூழலில் படம் எப்போது ரிலீஸாகுமென்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். படம் குறித்த அப்டேட் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிடப்படுமென தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.


 



அதன்படி, சலார் படமானது 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகவுள்ள இப்படத்தின் அறிவிப்பை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


மேலும் படிக்க | விக்ரமிற்கு பிறகு விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் ஒரே படம்! அதிகாரப்பூர்வ தகவல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ