பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே பற்றிய சுவாரஸ்யமான ரகசியங்கள்!

'முகமூடி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டேவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Aug 15, 2022, 08:14 AM IST
  • முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.
  • பிறகு தெலுங்கில் பிரபல நடிகையாக உயர்ந்தார்.
  • சமீபத்தில் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே பற்றிய சுவாரஸ்யமான ரகசியங்கள்! title=

திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்து, ரசிகர்கள் மனதிலும் நீங்காதொரு இடத்தை பிடித்து பிரபலமாக இருந்து வருபவர் நடிகை பூஜா ஹெக்டே.  சமீபகாலமாக இவரின் திறமையான நடிப்பினால் இவரின் நட்சத்திர அந்தஸ்து உயர்ந்து இருக்கிறது.  இந்திய நடிகையான இவர் 1990-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் தேதி பிறந்தார், கல்லூரி படிப்பை முடித்த பின்னர் மாடலிங் துறைக்குள் நுழைந்தவர் நடன நிகழ்ச்சிகள் மற்றும் பல பேஷன் ஷோக்களில் போட்டியாளராக பங்கேற்று வந்தார்.  இவர் 2009-ம் ஆண்டு நடைபெற்ற 'மிஸ் இந்தியா' போட்டியில் கலந்துகொண்டு தோல்வியடைந்தார், பின்னர் 2010-ம் ஆண்டு நடைபெற்ற 'மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா' போட்டியில் கலந்துகொண்டு மூன்றாவது பரிசை தட்டி சென்றார்.  இவர் கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் மராத்தி போன்ற மொழிகளை சரளமாக பேசுவார், தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி வகிப்பதால் தெலுங்கு மொழியையும் கற்று தேர்ந்துள்ளார்.

இவரை முதன்முதலில் சினிமா துறைக்குள் அறிமுகப்படுத்தியது இயக்குனர் மிஷ்கின்.  கடந்த 2012-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான 'முகமூடி' படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருந்தார்.  அதன்பின்னர் இவருக்கு தமிழில் அவ்வளவாக படம் அமையாத நிலையில் தெலுங்கு படங்கள் இவருக்கு கைகொடுத்தது.  இவர் முதன்முதலில் தெலுங்கில் நடித்த படம் 'ஒகா லைலா கோசம்', இந்த படம் 2014-ம் ஆண்டு வெளியானது.  அதனைத்தொடர்ந்து இவருக்கு அடுக்கடுக்காக படங்கள் ஒப்பந்தமாகி தெலுங்கு திரையுலகின் பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.  இவருக்கு அதிகளவில் பெயரை வாங்கித்தந்த படம் 'அழ வைகுந்தபுரமலு', அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்திருந்தார்.  இந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைகக்கன சைமா விருது வழங்கப்பட்டது.

மேலும் படிக்க | என்னது எனக்கு திருமணமா?... அம்மு அபிராமி கொடுத்த விளக்கம்

தற்போது மீண்டும் தமிழுக்கு வந்த இவர் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கம்பேக் கொடுத்திருந்தார். பொதுவாக ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த நடிகர் மற்றும் நடிகைகளின் முழு விவரங்களை பற்றி தேடி தெரிந்துகொள்வார்கள்.  அந்த வகையில் தற்போது பூஜா ஹெக்டேவை பற்றிய எந்த விஷயத்தை ரசிகர்கள் அதிகமாக தேடியுள்ளார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  அதன்படி ரசிகர்கள் பலரும் பூஜா ஹெக்டேவின் வயது மற்றும் உயரத்தை தான் அதிகமாக தேடியுள்ளனர்.  பூஜாவிற்கு தற்போது 31 வயது ஆகிறது, இவரது உயரம் 175 செ,மீ ஆகும்.  மேலும் இவரது நெட் வொர்த் 7 மில்லியன் என்று கணிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | கதாநாயகிகளுக்கு சம்பளமே இல்லை - புலம்பும் தமன்னா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News