தமிழ் மற்றும் மலையாளத்தில் நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் வெளியான 'நேரம்' படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன்.  இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, மலையாளத்தில் 'பிரேமம்' என்கிற படத்தை இயக்கினார்.  இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த படமும் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை அதிகம் ஈர்த்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ 4 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில் அனுஷ்கா!


இந்த இரண்டு படங்களும் வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  இதனை தொடர்ந்து அல்போன்ஸ் சமீபத்தில் பஹத் பாசில் மற்றும் நயன்தாராவை வைத்து 'பாட்டு'  என்கிற படத்தை இயக்கப்போவதாக அறிவித்திருந்தார்.  ஆனால் இவர்கள் இருவருக்கும் இப்படத்தில் நடிக்க கால்ஷீட் பிரச்சனை இருந்ததால் இப்படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது.



அதனை தொடர்ந்து பிரித்விராஜ் மற்றும் மற்றும் நயன்தாராவை வைத்து மலையாளத்தில் 'தங்கம் (GOLD)' என்கிற படத்தை இயக்கபோவதாக அறிவித்தார்.  அதன்படி பூஜைகள் போடப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு பனி தொடங்கப்பட்டது.  சுப்ரியா மேனனின் பிரித்விராஜ் ப்ரொடக்க்ஷன்ஸ மற்றும் லிஸ்டின் ஸ்தீபனின் மேஜிக் பிரேம்ஸ் ஆகியவற்றின் கூட்டணியில் இப்படம் தயாரிக்கப்படுகிறது.  இந்த படம் பிளாக்பஸ்டர் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  


 



மேலும் இப்படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் கூறுகையில், "தங்கம் (GOLD) படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது படத்தொகுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.  இந்த படம் நேரம் மற்றும் பிரேமம் படங்களை போன்றது அல்ல, இது கொஞ்சம் வேறு வகையான படம்.  சில நல்ல கதாபாத்திரங்கள், சில நல்ல நடிகர்கள், இரண்டு அல்லது மூன்று பாடல்கள் மற்றும் சில நகைச்சுவைகளுடன் மூன்றாவது படம். வழக்கம் போல் ஒரு எச்சரிக்கை! சண்டையையும், காதலையும் எதிர்பார்த்து யாரும் அந்த வழியாக வரக்கூடாது." என்று கூறியுள்ளார்.  நேரம் மற்றும் ப்ரேமம் பட வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் இப்படத்தை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கின்றனர்.


ALSO READ டாப்ஸி நடிக்கும் 'சபாஷ் மிது' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR