4 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில் அனுஷ்கா!

பாகுபலி படத்திற்கு பின்னர் அனுஷ்கா பற்றிய கிசுகிசுக்கள் திருயுலகை வட்டமடித்து வந்தது, மேலும் காதல், கல்யாணம் என்று தொடர்ந்து பல வதந்திகள் வந்து கொண்டிருந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 3, 2021, 03:34 PM IST
4 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில் அனுஷ்கா! title=

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் அனுஷ்கா ஷெட்டி.  தமிழில் மாதவனுடனும், தெலுங்கில் நாகர்ஜூனாவோடும் நடித்ததன் மூலம் திரையுலகில் நுழைந்தார்.  இவரை உயரத்திற்கு கொண்டு சென்ற படம் 'அருந்ததி'.  இப்படத்தின் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை திரும்பி பார்க்க செய்தார்.

ALSO READ டிசம்பர் மாதத்தில் அடுத்தடுத்து படங்களை வெளியிடும் Disney+ Hotstar!

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களையே அதிகம் தேர்வு செய்து திறமையாக நடித்து தன்னை சிறந்த கதாநாயகியாக நிலைநிறுத்தி கொண்டவர்.  இவர் நடிப்பில் வெளிவந்த பிரம்மாண்ட தயாரிப்பான 'பாகுபலி' திரைப்படம் இவரை புகழ் உச்சிக்கு கொண்டு சென்றது.  இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

anuska

இப்படத்திற்கு பின்னர் இவரை பற்றிய கிசுகிசுக்கள் திருயுலகை வட்டமடித்து வந்தது, மேலும் காதல், கல்யாணம் என்று தொடர்ந்து பல வதந்திகள் வந்து கொண்டிருந்தது.  'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக தனது உடல் எடையை ஏற்றினார், அதன் பின்னர் உடல் எடையை குறைக்க முடியாமல் போனதால் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் இல்லாமல் போனது.

anusak

இந்நிலையில் நடிகை அனுஷ்கா ஷெட்டி, இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நேரடி தமிழ் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  மேலும் இப்படம் கதாநாயகியை மையமாக வைத்து உருவாக்க போவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.  இறுதியாக தமிழில் சிங்கம் படத்தின் மூன்றாவது பாகத்தில் நடித்ததையடுத்து 4 வருடங்கள் கழித்து நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் இந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் அனுஷ்கா ஈடுபட்டு வருகிறார்.

ALSO READ விக்ரமுடன் கூட்டணி சேர்ந்த இயக்குனர் ரஞ்சித்! அரசியல் படமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News