தனது படங்களுக்கு வித்தியாசமான தலைப்புகளை வைப்பதிலும், அசத்தலான வசனங்களை எழுதுவதிலும், மக்களை கவரும் வண்ணம் திரைக்கதையை அமைப்பதிலும் வெங்கட் பிரபுவின் பாணி மிகவும் வித்தியாசமானது. அவரது படங்களுக்கென ஒரு தனி வகை ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்களில் இருக்கும் வித்தியாசமான படைப்பாற்றல் அனைவராலும் பாராட்டப்படுகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெங்கட் பிரபுவின் சகோதரர் பிரேம்ஜி அமரனும் (Premji Amaran) வித்தியாசமான படைப்பாற்றலில் சளைத்தவர் அல்ல. மிக வித்தியாசமான தலைப்புகளை அள்ளி வீசும் பிரேம்ஜி அவர் நடித்த படங்களில் பல வசனங்களையும் எழுதியுள்ளார். பாடகர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் என பல வேடங்களில் அசால்டாக பட்டையைக் கிளப்பும் இவர், இதற்கும் முன்னரும் பல வித புதிய விஷங்களை செய்துள்ளார். எனினும் தற்போது அடுத்து வரவிருக்கும் அவரது படத்தின் தலைப்பு அனைவரது கவனத்தையும் கவர்ந்து வருகிறது.


பிரபலமான திருட்டு திரைப்பட வலைத்தளமான 'தமிழ் ராக்கர்ஸ்' என்பதுதான் பிரேம்ஜியின் அடுத்த படத்தின் பெயராகும்.  அவர் சமூக ஊடகங்களில் (Social Media) இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். இதில் அவர் ஒரு உள்ளூர் டானை போல காணப்படுகிறார். இதுவரை காணப்படாத வகையில் ஒரு கடினமான, முரட்டான அவரது தோற்றம் பலரது ஆர்வத்தை தூண்டியுள்ளது. அவரது தோற்றத்தைப் போலவே படத்தின் பெயரும் ரசிகர்களையும் பட ஆர்வலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 



ALSO READ: Vijay Sethupathi Corona Relief: நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி


தமிழ் ராக்கர்ஸ் படத்தை பரணி ஜெயபால் இயக்குகிறார். படத்திற்கு பிரெம்ஜி இசை அமைக்க கங்கை அமரன் பாடல்களை எழுதியுள்ளார். 


இந்த படத்தைத் தவிர, சிலம்பரசன் டி.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள வெங்கட் பிரபுவின் 'மாநாடு'  (Maanaadu) படத்திலும் பிரேம்ஜி காணப்படுவார். இந்த படம் ஒரு அரசியல் படம் என கூறப்பட்டுள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் கருணாகரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 


இதைத் தவிர வெங்கட் பிரபுவின் வலைத் தொடரிலும் பிரேம்ஜி காணப்படுவார். மேலும், ராதா மோகன் இயக்கி அண்மையில் வெளியான 'மலேசியா டூ அம்னீசியா' படத்திற்கும் பிரேம்ஜி இசையமைத்துள்ளார். இப்படத்தில் வைபவ் மற்றும் வாணி போஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


ALSO READ: Kollywood News: தமிழக முதல்வரின் புதிய விதிக்கும் இந்த படத்துக்கும் என்ன சம்பந்தம்?


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR