நடிகை பிரியாமணி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழில் முன்னணியில் இருக்கும் அனைத்து நடிகர்களுடன் நடித்தார். கண்களால் கைது செய் படம் மூலம் தமிழில் அறிமுகமான அவர், பருத்தி வீரன் திரைப்படம் மூலம் ஸ்டார் நடிகை அந்தஸ்தைப் பெற்றார். தேசிய விருது கிடைத்த அந்தப் படத்துக்குப் பிறகு பிரியா மணிக்கு படங்கள் வரிசையாக வந்தது. ஆனால், திடீரென திரையில் இருந்து மறைந்துபோனார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | முடிவுக்கு வந்த நயன் - விக்கி ஹனிமூன்! - பின்னணியில் யார் தெரியுமா?


படங்கள் ஏதும் இல்லாததால் 2017 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் அடியெடுத்து வைத்தார். சில ஆண்டுகள் ரியாலிட்டி ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்த அவர், படங்களில் நடிக்காமல் இருந்தார். இருப்பினும் வெப்சீரிஸ் மற்றும் சினிமாக்களில் நடிக்க வாய்ப்புகள் மீண்டும் வந்ததால் முழுவீச்சில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பேம்லிமேன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அசுரன் ரீமேக்கிலும் நடித்த அவர், ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் பாலிவுட் படத்திலும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 



நடிப்புக்கு திரும்பியது குறித்து பேட்டியளித்துள்ள பிரியாமணி, தமிழ் திரையுலகில் தான் எதிர்கொண்ட சவால்களையும் வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது சில நடிகைகள் வலுக்கட்டாயமாக கிளாமர் ரோலுக்கு தள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகைகளுக்கு இருக்கும் உடல்வாகு வேறு, தமிழ் நடிகைகளுக்கு இருக்கும் உடல்வாகு வேறு. இருப்பினும் வேண்டும் என்றே நடிகைகள் கிளாமர் சீன்களில் நடிக்க கட்டாயப்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார். இப்போது நிலைமை கொஞ்சம் மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | ஆண்டிரியாவுடன் பிரேக் ஆப் ஆனது ஏன்? அனிரூத் வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR