சூர்யாவுடன் இணையப்போகும் பிரபல மலையாள நடிகர்! வைரலாகும் புகைப்படங்கள்!
சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் பிரித்விராஜ் விரைவில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
தமிழ் திரையுலகில் சூர்யா எப்படி முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறாரோ அதேபோல தான் மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களுள் ஒருவராக ப்ரித்விராஜும் இருந்து வருகிறார். பிரித்விராஜ் மலையாள படங்கள் மட்டுமின்றி பல தமிழ் படங்களிலும் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட முகமாக தான் இருந்து வருகிறார். சமீபத்தில் சூர்யா-ஜோதிகா ஜோடி இருவரும் பிரித்விராஜ் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்தனர், இரண்டு நடிகர்களும் தங்கள் மனைவிகளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதை பார்த்ததும் ரசிகர்கள் பலரும் லோகேஷின் எல்சியூ-வில் சூர்யாவோடு பிரித்விராஜ் இணைகிறாரா என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
மேலும் படிக்க | வாத்தி வசூலை எண்ணிக்கொண்டிருக்கிறார் வம்சி: வெங்கி அட்லூரி கலகல பேச்சு
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, இவர்களின் இந்த சந்திப்பு எதிர்கால திட்டத்திற்கானது என்று தெரிய வந்துள்ளது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் பிரித்விராஜ் விரைவில் நடிக்க முடிவு செய்துள்ளார். இந்த திட்டம் பிரிட்டனியா நிறுவனத்தின் மறைந்த தொழிலதிபர் ராஜன் பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமாக இருக்கும் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
'பிஸ்கட் பேரான்' என்று பிரபலமாக அறியப்பட்டவர் தான் தொழிலதிபர் ராஜன் பிள்ளை, இவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட இருக்கும் படத்தில் பிரித்விராஜ் ராஜன் பிள்ளை கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இந்த படத்தை சரீகமா இந்தியா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் என்று சில செய்திகள் கூறுகிறது. சரீகமா நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் சித்தார்த் ஆனந்த் குமார் இந்த படத்திற்கான எழுத்து பணிகளில் பிசியாக இருந்து வருகிறார். இருப்பினும் இந்த கதையை படமாக வெளியிட போகிறார்களா அல்லது வெப் தொடராக வெளியிட போகிறார்களா என்பது பற்றிய தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க | 'பொன்னியின் செல்வன்-2' படத்தின் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்?