செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய நடிகை ப்ரியா பவானி சங்கர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘காதல் முதல் கல்யாணம் வரை’ என்ற தொடரில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த தொடரில் நடித்து பிரபலமான அவருக்கு ரத்ன குமார் இயக்கத்தில் வெளியான‘மேயாத மான்’ படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்ஜூக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்தது. இப்போது படுபிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார். அந்தளவுக்கு கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்மையில் வெளியான யானை, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் ஹிட்டானது. இதுதவிர தற்போது தமிழ் சினிமாவில் பிசியான ஹீரோயின் என்றால் அது ப்ரியா பவானி சங்கர் தான். தற்போது நடிகை ப்ரியா பவானி சங்கர் கைவசம் ராகவா லாரன்ஸின் ருத்ரன், ஜெயம் ரவிக்கு ஜோடியாக அகிலன், எஸ்.ஜே.சூர்யா உடன் பொம்மை, சிம்புவின் பத்து தல, கமல்ஹாசனின் இந்தியன் 2 என அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார்.


மேலும் படிக்க | கேஜிஎப்2 திரைப்படத்தை இலவசமாக பார்க்கலாம் - கட்டணத்தை ரத்து செய்த அமேசான்


தொடர்ந்து படங்களில் ஓய்வின்றி நடித்து வந்த இவர், தற்போது வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் தனது காதலன் உடன் ஸ்விட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். மேலும் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.



 



இதற்கிடையில் தற்போது அவர் ஸ்கை டைவிங் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள வீடியோ செம்ம வைரல் ஆகி வருகிறது. அத்துடன் அவர் முதன்முறையாக ஸ்கை டைவிங் செய்தது குறித்து தனது அனுபவத்தையும் அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெகுவாக வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | நயன்தாராவின் ஃபிட்னஸ் மற்றும் பியூட்டியின் ரகசியம் இதுதானா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ