பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ்: மகளின் பெயர் இதுதான், பெயருக்கான காரணம் என்ன தெரியுமா
Priyanka Chopra - Nick Jonas: பிரியங்கா மற்றும் நிக்கின் குழந்தைக்கு மால்தி மேரி சோப்ரா ஜோனஸ் என்று பெயரிடப்பட்டுள்ளதாக டிஎம்எஸ் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் பாடகர் நிக் ஜோனஸ் இருவரும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு அழகான குழந்தைக்கு பெற்றோர் ஆயினர். வாடகைத் தாய் மூலம் தங்களின் முதல் குழந்தை இந்த பூமிக்கு வந்ததை அவர்கள் இன்ஸ்டாகிராமில் அறிவித்தனர். அதன்பிறகு, பிரியங்கா ஜோனஸ் ஜோடி குழந்தையை பற்றி எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை, குழந்தை ஆணா பெண்ணா என்றுகூட தெரியாமல் இருந்தது.
பிரியங்கா ஜோனஸின் குழந்தை ஒரு பெண் குழந்தை என்றும் அக்குழந்தையின் பெயரும் தற்போது ஊடக செய்திகள் மூலம் வெளிவந்துள்ளன.
பிரியங்கா மற்றும் நிக்கின் குழந்தைக்கு மால்தி மேரி சோப்ரா ஜோனஸ் என்று பெயரிடப்பட்டுள்ளதாக டிஎம்எஸ் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மூலம் இந்த தகவலக்ள் தெரியவந்துள்ளதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. கலிபோர்னியாவின் சான் டியாகோவில் ஜனவரி 15 அன்று இரவு 8 மணியளவில் குழந்தை பிறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரியங்கா நிக் தம்பதியினர் தங்கள் குழந்தை பிறந்ததை ஆறு நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜனவரி 21 அன்று இன்ஸ்டாகிராம் பதிவு மூலம், "வாடகைத் தாய் மூலம் எங்கள் குழந்தை பூமிக்கு வந்துள்ளது. இதை தெரிவிக்க நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த மகிழ்ச்சிகரமான நேரத்தில் நாங்கள் ப்ரைவசியை எதிர்பார்க்கிறோம். மிக்க நன்றி" என்று அறிவித்தனர்.
பிரியங்காவின் குழந்தைக்கு வைக்கப்பட்டுள்ள மால்தி மேரி சோப்ரா ஜோனாஸ் என்ற பெயர் பிரியங்கா மற்றும் நிக்கின் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது. மாலதி என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தையாகும். இதன் பொருள் சிறிய மணம் கொண்ட மலர் அல்லது நிலவொளி. மேரி லத்தீன் ஸ்டெல்லா மாரிஸிலிருந்து வந்தது. இதன் பொருள் கடலின் நட்சத்திரமாகும். இது இயேசுவின் தாயான மேரி என்ற பெயரின் பிரஞ்சு பதிப்பு என்பதால் இது விவிலிய அர்த்தத்தையும் கொண்டுள்ளது.
சமீபத்தில், யூடியூபர் லில்லி சிங்குடன் ஒரு உரையாடலில், பிரியங்கா தாயாக மாறும் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். “ஒரு புதிய தாயாக, நான் என் ஆசைகள், அச்சங்கள், என் வளர்ப்பு முறை ஆகியவற்றை ஒருபோதும் என் குழந்தை மீது திணிக்க கூடாது என நினைத்துக் கொண்டிருக்கிறேன். இது என் குழந்தையாக இருப்பதால், நான்தான் அனைத்தயும் தீர்மானிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.” என்று கூறியிருந்தார்.
பிரியங்கா அடுத்து 'இட்ஸ் ஆல் கமிங் பேக் டு மீ' என்ற காதல் திரைப்படத்தில் சாம் ஹியூகனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இது முன்பு 'டெக்ஸ்ட் ஃபார் யூ' என்று அழைக்கப்பட்டது. மேலும் ருஸ்ஸோ பிரதர்ஸின் அமேசான் தொடரான ‘சிட்டாடல்’ படப்பிடிப்பையும் அவர் முடித்துள்ளார். கத்ரீனா கைஃப் மற்றும் ஆலியா பட் ஆகியோருடன் ஃபர்ஹான் அக்தரின் ‘ஜீ லே ஜரா’ மூலம் பாலிவுட்டில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்கவும் அவர் தயாராக உள்ளார்.
மேலும் படிக்க | ‘ராக்கி பாய்’ இடத்தில் இனி சூர்யா?! - ‘KGF’ டீம் எடுத்த அதிரடி முடிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR