பான் இந்திய படைப்பாக உருவாகும் நேச்சுரல் ஸ்டார் நானியின் “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்தில், நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். கேங் லீடருக்குப் பிறகு நானியுடன் அவர் நடித்த இரண்டாவது படம் இது. அதிரடி ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்திலிருந்து பிரியங்கா மோகனின் கதாப்பாத்திரமான சாருலதா, ஃபர்ஸ்ட் லுக்கை இன்று, தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பிரியங்கா மோகனின் சாருலதா கதாப்பாத்திரம், அப்பாவி போலீஸ் அதிகாரியாக காட்சியளிக்கிறது. அந்த கதாப்பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார். அவரது முகத்தில் ஒரு அழகான புன்னகை மிளிர்கிறது. காக்கி உடையில், தோளில் பையுடன் சாலையில் நடந்து செல்கிறார் பிரியங்கா. இப்படத்தில் பிரியங்காவின் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.


மேலும் படிக்க | 10 நிமிட காட்சிக்கு 100 கோடி சம்பளம்! அநியாயம் செய்யும் தமிழ் நடிகர்..யார் தெரியுமா?



விவேக் ஆத்ரேயா இயக்க, DVV தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் DVV என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் மிகச்சிறந்த தொழில்நுட்ப தரத்துடன், இந்தப் படத்தினை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.


இப்படத்திற்கு முரளி ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் எடிட்டிங் செய்கிறார். இந்த பான் இந்திய திரைப்படம் ஆகஸ்ட் 29, 2024 அன்று தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.


“சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சூர்யாஸ் சாட்டர்டே படத்தின் செகண்ட் லுக் வெளியானது. இதில் சூர்யா மற்ற கிழமைகளில் எப்படி இருப்பார் என்பது வெளியிடப்பட்டது. சூர்யாஸ் சாட்டர்டே படத்தில் இருந்து இதுவரை வெளியிட்ட போஸ்டர்களில் நானியை ஆக்ரோஷமான இளைஞனாகவே காட்சிப்படுத்தினர்.‌ ஆனால் அவர் சனிக்கிழமைகளில் மட்டுமே வன்முறையாளர் என்றும், மற்ற நாட்களில் சூர்யாவின் தோற்றத்தை ரசிக்கவும், அவரது புதிய பரிமாணத்தை அனுபவிக்கவும் தற்போது அந்த கதாபாத்திரத்தின் செகண்ட் லுக்கில் கட்டப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.‌


“சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்தின் நடிகர், நடிகைகளின் முழு விவரம்:
நானி, பிரியங்கா அருள் மோகன், எஸ். ஜே. சூர்யா, சாய் குமார்.


தொழில்நுட்பக் குழு
எழுத்து & இயக்கம் : விவேக் ஆத்ரேயா
தயாரிப்பாளர்கள் : டி வி வி தனய்யா & கல்யாண் தாசரி
தயாரிப்பு நிறுவனம் : டி வி வி என்டர்டெய்ன்மெண்ட்
இசை : ஜேக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு : முரளி. ஜி
படத்தொகுப்பு : கார்த்திகா ஸ்ரீனிவாஸ்
சண்டை பயிற்சி இயக்குநர் : ராம்- லக்ஷ்மன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : வால்ஸ் & ட்ரெண்ட்ஸ்


மேலும் படிக்க | வரலக்ஷ்மி ரிசப்ஷனுக்கு மட்டும் இத்தனை கோடியா? அம்பானி போல் செலவு செய்த சரத்குமார் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ