கலைப்புலி எஸ் தாணுவின் அடுத்த படம்.. பிரம்மாண்ட மாஸ் அறிவிப்பு இதோ
கலாப்பிப்புலி எஸ் தாணு தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆவார், அவர் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார் மற்றும் தொழில்துறையில் புதிய முயற்சிகளை ஆதரித்துள்ளார். அவரது பேனர், `வி கிரியேஷன்ஸ்`, கோலிவுட்டில் பல ஹிட் படங்களை வழங்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் மிக முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவராக தொடர்ந்து சிறந்த படைப்புகளை வழங்கி வருபவர் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு. இவர் தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பில் கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப்புடன் இணைகிறார். இந்த தகவலை ஒரு வீடியோ ஒன்றின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
முன்னதாக கடந்த 1997 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமாகி கன்னடத் திரை உலகில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த கிச்சா சுதீப், இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் சூர்யா - விவேக் ஓப்ராய் இணைந்து நடித்த ரத்த சரித்திரம் 2 படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகமானார். பின்னர் பிரம்மாண்ட இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த நான் ஈ திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிய கிச்சா சுதீப் இந்திய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதன் பிறகு பாகுபலி, மற்றும் சல்மான் கானின் தபாங் 3 உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த கிச்சா சுதீப் நடிப்பில் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த விக்ராந்த் ரோனா திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் படிக்க | பாசமலர் டூ மாற்றான்..சகோதர பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தமிழ் படங்கள்
இந்த நிலையில் தனது திரைப் பயணத்தில் 46வது திரைப்படமாக உருவாகும் புதிய #kichcha46 படத்தில் கலைப்புலி எஸ் தாணுவுடன் கிச்சா சுதீப் கைகோர்த்துள்ளார். இப்படத்தின் இயக்குனர் யார் மற்றும் நடிகர் நடிகைகள் யார் யார் என்ற எதிர்பார்ப்புகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கிளம்பி இருக்கின்றன. அதிக அளவு திர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் இந்த திரைப்படத்தின் மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிச்சன் 46 படத்தின் அதிரடியான புதிய வீடியோ இதோ:
இந்த நிலையில் இந்த வீடியோவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்களும் நடிகர் கிச்சா சுதீப் அவர்களும் நேரில் சந்தித்து கைகுலுக்குகிறார்கள். வீடியோவின் முடிவில் “புதிய உலகத்திற்குள் அடியெடுத்து வைக்கிறோம் டீசருடன் உங்களை சந்திக்கிறோம்” கூறி வீடியோ முடிவடைகிறது.
இதனிடையே கலைப்புலி எஸ் தாணு ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் ’வாடிவாசல்’ என்ற திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். மிக நுணுக்கமான பிரம்மிக்க வைக்கும் VFX காட்சிகள் வாடிவாசல் திரைப்படத்திற்கு தேவைப்படுவதால் அதற்காக ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய முன்னணி நிறுவனத்தோடு இணைந்து லண்டனில் தங்கி இருந்து அந்த CG பணிகளை இயக்குனர் வெற்றிமாறன் தற்போது கண்காணித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ