பிரபல வெற்றி இயக்குனருடன் இணையும் நடிகர் சூர்யா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான நடிகர் சூர்யா பிரபல இயக்குனருடன் முதன்முறையாக இணைந்துள்ளார்.

Last Updated : Dec 22, 2019, 06:38 PM IST
பிரபல வெற்றி இயக்குனருடன் இணையும் நடிகர் சூர்யா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான நடிகர் சூர்யா பிரபல இயக்குனருடன் முதன்முறையாக இணைந்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் அசுரன். இந்த படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 100 கோடிக்கும் மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது. 

இந்நிலையில் தற்போது வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யாவின் 40-வது படத்தை இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க உள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், அசுரனின் அசுர வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன், முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் சூர்யாவின் 40வது படத்தை எனது வி கிரியேஷன்ஸ் தயாரிப்பதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

 

 

More Stories

Trending News