மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பிரபல தயாரிப்பாளர் காலமானார்!
Producer Nitin Manmohan passed away : பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் நிதின் மன்மோகன் இன்று காலை மும்பையில் காலமானார்.
Producer Nitin Manmohan passed away : பாலிவுட்டில் போல் ராதா போல், லாட்லா, ரெடி, பூட் போன்ற பல திரைப்படங்களை தயாரித்து, புகழ்பெற்ற தயாரிப்பாளர் நிதின் மன்மோகன், சில வாரங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. அவரை உடனடியாக, நவி மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில், அவர் இன்று காலை காலமானார் என்று அவரது மகள் பிராசி உறுதிசெய்தார். அவர் கடந்த மூன்று வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | கணவரை தாக்கிய கொள்ளையர்கள்... தடுக்க வந்த நடிகை சுட்டுக்கொலை
60 வயதான அவர் இதயக் கோளாறு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மிகவும் ஆபத்தான நிலையில் வந்து ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார் என்று மருத்துவமனை அலுவலர் ஒருவர் தெரிவித்தார். மேலும், அவர் உயிரிழப்பது முன்பு வரை வென்டிலேட்டரில் இருந்தார்.
தயாரிப்பாளரின் உடல்நலக்குறைவு பற்றி அறிந்ததும், நடிகர் அக்ஷய் கண்ணா அவரின் குடும்பத்தை தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். நிதின் மன்மோகன் - அக்ஷய் கண்ணா, இருவரும் தீவாங்கி, 'கலி கலி சோர் ஹை' போன்ற படங்களில் இணைந்து பணியாற்றினர்.
பல ஆண்டுகளாக, போல் ராதா போல் (1992), லாட்லா (1994), யம்லா பக்லா தீவானா (2011), லவ் கே லியே குச் பி கரேகா (2001), தஸ் (2005), சல் மேரே பாய் (2001), மஹா-சங்ராம் (1990), இன்சாஃப்: தி ஃபைனல் ஜஸ்டிஸ் (1997), தீவாங்கி, நயீ படோசன் (2003), அதர்ம் (1992), பாகி, ஈனா மீனா தீகா, ததாஸ்து, டேங்கோ உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.
பிரம்மச்சாரி, கும்னாம், நயா ஜமானா போன்ற படங்களில் நடித்து மறைந்த நடிகர் மன்மோகனின் மகன் நிதின் மன்மோகன். அவருக்கு மனைவி, பிராச்சி என்ற மகள் மற்றும் சோஹம் என்ற மகன் உள்ளனர்.
மேலும் படிக்க | படப்பிடிப்பு தளத்தில் நடிகை தற்கொலை - சக நடிகர் மீது வழக்குப்பதிவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ