KVN Productions Next Film KD The Devil Song Released : விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தை இயக்கும் நிறுவனம் KVN Productions. இவர்கள்,கேடி  - தி டெவில் என்ற படத்தை தயாரித்திருக்கின்றனர். இந்த படத்திலிருந்து "சிவ சிவா" என்ற தெய்வீகமான நாட்டுப்புற பாணி வகையிலான பாடலை வெளியிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

KVN Productions நிறுவனம்,  தொலைநோக்கு படைப்பாளி பிரேம் இயக்கத்தில், மிகவும் எதிர்பார்க்கப்படும்  பான்-இந்தியா திரைப்படம் கேடி  - தி டெவில் படத்திலிருந்து, "சிவ சிவா" என்ற கன்னட நாட்டுப்புற கீதத்தைப் பெருமையுடன்  வெளியிட்டுள்ளது. மனதை  வசீகரிக்கும் இந்தப் பாடல், கன்னட நாட்டுப்புற இசையின் துடிப்பான சாரத்தை,  பாரம்பரியத்தை, கொண்டாடுகிறது.


இப்பாடலைப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யாவால் இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவாளர் வில்லியம் டேவிட், காட்சிக்கு உயிரூட்டியுள்ளார். இந்தப் பாடல் இந்திய நாட்டுப்புற இசையின் கலாச்சார ஆழத்தையும் கலையின் ஆழத்தையும் எடுத்துக் காட்டுகிறது. 


முன்னணி பாடகர்கள் கைலாஷ் கெர் மற்றும் பிரேம் (கன்னடம்), விஜய் பிரகாஷ் (தமிழ் மற்றும் தெலுங்கு), பிரணவம் ஷஷி (மலையாளம்), மற்றும் சலீம் மாஸ்டர் (இந்தி)- ஆகியோர் பாடியுள்ளனர். ஒவ்வொரு பதிப்பும் பாடலின் ஆத்மார்த்தமான மையத்தை, அதன் மொழியியல் சாரத்தோடு பிரதிபலிக்கிறது.


முன்னணி பாடலாசிரியர்கள் மஞ்சுநாத் பி.எஸ் (கன்னடம்), மதன் கார்க்கி (தமிழ்) சந்திர போஸ் (தெலுங்கு), ரகீப் ஆலம் (இந்தி), மற்றும் மான்கொம்பு கோபாலகிருஷ்ணன் (மலையாளம்), ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவமான பாடல் வரிகளைத் தந்துள்ளனர். ஆனந்த் ஆடியோ லேபிள் இப்பாடலை வெளியிட்டுள்ளது. 


"சிவ சிவா" என்பது வளமான கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் நாட்டுப்புற இசையின் உலகளாவிய ஈர்ப்பைத் தரும் அற்புதமான பாடலாகும். இப்பாடல் இப்போது கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.



சூப்பர் ஸ்டார் அஜய் தேவ்கன் டிசம்பர் 24 அன்று இரவு 11:04 மணிக்கு,  பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் பிரபல திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (லியோ, விக்ரம், மாஸ்டர் புகழ்) பாடலை தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்து, அதன் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறார்.


முன்னணி இளம் நட்சத்திர நடிகர்  துருவா சர்ஜா, கேடி - தி டெவில் படத்தில், இதுவரையில் ஏற்றிராத மாஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.  அவரது கதாப்பாத்திரம் இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும்படி அமைந்துள்ளது. இப்படத்தின் "சிவ சிவா" பாடல் நாடு முழுவதும் உள்ள இதயங்களை வென்றுள்ளது. அதன் தாள துடிப்புகள், கிராமிய வசீகரம் மற்றும் பக்தி உணர்வு ஆகியவற்றுடன், "சிவ சிவ" ஒரு உண்மையான கொண்டாட்டமாகும். கன்னட நாட்டுப்புற கலாச்சாரம் மற்றும் மொழி எல்லைகளைத் தாண்டிய இசை அனுபவமாக இப்பாடல் அமைந்துள்ளது.


KVN புரொடக்ஷன்ஸ் அனைவரையும் வசீகரிக்கும் நாட்டுப்புற கீதத்தில் மூழ்க  அழைக்கிறது. இப்போது அனைத்து முக்கிய தளங்களிலும் இப்பாடல் ஸ்ட்ரீமிங்காகிறது.


மேலும் படிக்க | தளபதி 69: விஜய்யுடன் 2ஆம் முறையாக இணைந்த 39 வயது நடிகை! அவர் யார் தெரியுமா?


மேலும் படிக்க | தளபதி 69 : விஜய்யுடன் சேர்ந்து நடிக்க மறுத்த சத்யராஜ்!! காரணம் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ