`புரியாத புதிர்`: வெளியானது இரண்டாவது ட்ரைலர்!
விஜய் சேதுபதி நடித்து நீண்ட நாளாக வெளிவர காத்திருக்கும் "புரியாத புதிர்" படத்தின் இரண்டாவது ட்ரைலர் இன்று வெளியாக உள்ளதாக விஜய் சேதுபதி அவரது முகபுத்தகத்தில் இன்று காலை பதிவிட்டார். இந்நிலையில் தற்போது "புரியாத புதிர்" படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் செப்டம்பர் 1ஆம் தேதி வெளிவர காத்திருக்கும் தமிழ் திரில்லர் திரைப்படம் "புரியாத புதிர்". ரஞ்சித் ஜெயக்கொடி இந்த திரைப்படத்தை இயக்குகிறார். ரெபெல் ஸ்டுடியோ தயாரிக்கிறது. விஜய் சேதுபதி மற்றும் காயத்திரி முக்கிய வேடங்களில் நடிகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் இன்று வெளியாகியது.