Pushpa 2 Update: தெலுங்கு திரையுலகில் இருந்து பான் இந்தியா படமாக வெளியாகி, உலகம் முழுவதும் வசூல் ரீதியாக பெரும் ஹிட் அடித்த திரைப்படம்தான் 'புஷ்பா'. 2021ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி வெளியான இப்படத்தை மொழி கடந்து, நாடு கடந்து பலரும் கொண்டாடி தீர்த்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கு திரைப்பட இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. மேலும், இப்படத்தின் பாடல்களும், வசனங்களும் உலக அளவில் ஹிட் அடித்தது என சொல்லலாம். 


தமிழில் சொல்வது என்றால், 'ஊன்... சொல்றியா மாமா', 'சாமி... சாமி', 'ஸ்ரீவள்ளி' உள்ளிட்ட பாடல்கள் குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் வாயில் முணுமுணுத்து வந்தனர். தெலுங்கு திரைப்படம் என்ற போதிலும், இந்தி வெர்ஷன் குறித்தும் அதிகமாக பேசப்பட்டது. இந்தி வெர்ஷனின் வெற்றி, அல்லு அர்ஜுன் அடுத்து பாலிவுட்டில் நேரடியாக நடிக்கும் அளவிற்கு வாய்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | Thalaivar 171: கமல் தயாரிப்பில் ரஜினி... விக்ரம் வரிசையில் அடுத்த சம்பவம்... லோகேஷ் ஸ்கெட்ச்!


புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் அடுத்து வெளிவரும் என கூறப்பட்டது. மேலும், அதற்கான படப்பிடிப்பு தொடங்கிவிட்ட நிலையில், படம் வெளியாகும் தேதி, டிரைலர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு ரசிகர்கள் நீண்ட நாள்களாக காத்திருக்கின்றன. இந்நிலையில், புஷ்பா படத்தின் படக்குழு, இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்புடன் கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். 


முதல் பாகம் புஷ்பா தி ரைஸ் என வெளிவந்த நிலையில், இரண்டாம் பாகம் புஷ்பா தி ரூல் என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. மேலும், படக்குழு இன்று வெளியிட்ட 20 நொடி வீடியோவின் பின்னணி குரலில்,"புஷ்பா திருப்பதி சிறையில் இருந்து தப்பித்துவிட்டார். புஷ்பா எங்கே இருக்கிறார்" என கேள்வி எழுப்புகிறது. இதன்மூலம், புஷ்பா இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டை வரும் ஏப். 7ஆம் தேதி மாலை 6.30 அணிக்கு அறிவிக்க உள்ளதாகவும், படக்குழு அந்த வீடியோவில் வெளியிட்டுள்ளது. 



வரும் ஏப். 8ஆம் தேதி அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் என்ற நிலையில், அதற்கு ஒருநாள் முன்பு புஷ்பா இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில், புஷ்பா இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற தகவல் இடம்பெற வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும், படத்தின் நாயகி ராஷ்மிகா இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், இந்த 20 நொடி வீடியோவை அப்படக்குழு வெளியிட்டுள்ளது. அனைவரும் எதிர்பார்த்ததை விட கூடிய விரைவில் புஷ்பா இரண்டாம் பாகம் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க | தளபதி விஜய்க்காக முதல் ஆளாக கீர்த்தி சுரேஷ் செய்த காரியம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ