பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு தனது புகழ்பெற்ற வாழ்க்கையில் பல வெற்றிப் படங்களைப் கொடுத்துள்ளார். தெலுங்கு சினிமாவில் பல ஹிட்களை கொடுத்து தனக்கென ஒரு நிலையான இடத்தை எடுத்துக்கொண்டுள்ளார். அவரது நடிப்பில் அடுத்து வரவிருக்கும் மிகப்பெரிய படம் குண்டூர் காரம். பல நல்ல படங்களை மகேஷ் பாபு கொடுத்து இருந்தாலும், புஷ்பா, கஜினி போன்ற சூப்பர்ஹிட் படங்கள் உட்பட பல திரைப்பட வாய்ப்புகளை மகேஷ் பாபு நிராகரித்துள்ளார். மகேஷ் பாபு நிராகரித்த திரைப்படங்களைப் பற்றி முழு விவரங்கள் இங்கே:


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


கஜினி (Gajini)


மகேஷ் பாபுவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை ஏ.ஆர்.முருகதாஸுக்கு இருந்தது. அவர் கஜினியின் ஸ்கிரிப்டுடன் மகேஸ் பாபுவை அணுகினார், ஆனால் குறிப்பிடப்படாத காரணங்களுக்காக மகேஷ் பாபு கஜினி படத்தை மறுத்துவிட்டார். இதையடுத்து அந்த கதாபாத்திரத்தில் சூர்யாவை படத்தில் நடிக்க வைத்தார் முருகதாஸ். இது அவரது கேரியரில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியாக மாறியது. பின்னர், மகேஷ் மற்றும் முருகதாஸ் இணைந்து ஸ்பைடர் படத்தில் இணைந்தனர், ஆனால் ஸ்பைடர் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.  


மேலும் படிக்க | 40 வயதிலும் 20 வயது வாலிபன் தோற்றம்..! சிம்புவின் இளமைக்கான ரகசியம் என்ன..?


புஷ்பா (Pushpa)


இயக்குனர் சுகுமார் முதலில் புஷ்பா கதையை மகேஷ் பாபுவிடம் கூறியுள்ளார். இருப்பினும், மகேஷ் பாபு இந்த படத்தை நிராகரித்தார், இந்த படத்தின் கதையும் புஷ்பா கதாபாத்திரமும் சரியாக வடிவமைக்கப்படவில்லை என்று நிராகரித்துள்ளார். பின்பு சுகுமார் அல்லு அர்ஜுனிடம் இந்த கதையை கூறினார், அவரும் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.  புஷ்பா படம் வெளியானதில் இருந்து அல்லு அர்ஜுனுக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்துள்ளது.  மேலும் பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளது.  தற்போது இதன் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.


அனிமல் (Animal)


முதலில், சந்தீப் ரெட்டி வங்கா தனது வரவிருக்கும் அனிமல் திரைப்படத்தில் மகேஷ் பாபுவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பேச்சுவார்தை நடத்தினார்.  ஆனால் மகேஷ் பாபு மறுத்துவிட்டார், அந்த கதாபாத்திரத்தின் இருண்ட தன்மை அவரது விருப்பங்களுடன் பொருந்தவில்லை என்று காரணம் காட்டி அந்த படத்தில் இருந்து வெளியில் வந்துள்ளார். பிறகு ராஷ்மிகா மந்தனா மற்றும் ரன்பீர் கபூருக்கு இந்த கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டது. இப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


லீடர் (Leader)


லீடர் திரைப்படம் முதலில் மகேஷ் பாபுவுக்கு ராணா டக்குபதி நுழைவதற்கு முன் வழங்கப்பட்டது. ஆனாலும், மகேஷ் அந்த பாத்திரத்தை மறுத்துவிட்டார், ஏனெனில் அதன் அதிரடி-சார்ந்த கதைக்களத்திற்கு கணிசமான உடல் மாற்றத்தைக் இயக்குனர் கோரினார். தெலுங்கானாவில் நக்சலைட் இயக்கத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றி பெற்றது.


இடியட் (Idiot)


இடியட் படத்தில் ஆரம்பத்தில் மகேஷ் பாபு நடிப்பதாக இருந்தது, பிறகு இந்த படம் தனக்கு பொருத்தமாக இருக்காது என்று எண்ணி விலகி உள்ளார், எனவே அவர் அந்த வாய்ப்பை நிராகரித்தார். பின்னர் ரவிதேஜாவுக்கு இயக்குனர் அந்த பாத்திரத்தை வழங்கினார். பூரி ஜெகநாத் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் ரக்ஷிதா, பிரகாஷ் ராஜ், கிரிபாபு, நரசிங் யாதவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.


மேலும் படிக்க | மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் கமல்ஹாசன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR