Pushpa Update: புஷ்பா படத்தின் முக்கிய அப்டேட் இதோ
புஷ்பா படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா.
சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார். இயக்குனர் சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுன் (Allu Arjun) கூட்டணியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக புஷ்பா வெளியாக இருக்கிறது.
ALSO READ | ஆலா வைகுண்டபுரம்லோ-வின் தமிழ் ரீமேக்கில் சிவகார்த்திகேயன்...?
மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இந்த த்திரைப்படத்தின் முதல் பாகம் இந்த வருடம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது. முன்னதாக நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் செம வைரலானது.
இந்நிலையில் கொரொனா பரவல் காரணமாக படத்தினை ரிலீஸ் செய்ய முடியாததால் அதே தேதியில் அப்படத்தின் முதல் பாடலை வெளியிட முடிவெடுத்துள்ளது. ஐந்து மொழிகளில் ஐந்து பாடகர்களை கொண்டு ஒரே டியூனில் இந்த பாடல் வெளியாக உள்ளது. இந்த பாடலை தமிழில் பென்னி டயாலும், ஹிந்தியில் விஷால் டாடாலனியும், தெலுங்கில் சிவமும், மலையாளத்தில் ராகுல் நம்பியாரும், கன்னடத்தில் விஜய் பிரகாஷும் பாடியுள்ளனர். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பிறந்தநாளான இன்று இந்த அறிவிப்பபை வெளியிட்டுள்ளது படக்குழு.
மிகப்பெரிய பொருட்செலவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தில் முதலில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கால்ஷீட் பிரச்சனைகளால் நடிக்க முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | அல்லு அர்ஜுனின் அடுத்த படம்..வெளியானது FIRST LOOK....
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR