நடிகை அமலாபால் ரூ.1.12 கோடிக்கு வாங்கிய பென்ஸ் காரை போலி முகவரியில் பதிவு செய்து லட்சக்கணக்கில் வரிமோசடி செய்ததாக தற்போது பரபரப்பு புகார் எழுந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் இருந்து பென்ஸ் எஸ்.கிளாஸ் காரை வாங்கிய தாக கூறப்படுகிறது. இதன் விலை ரூ.1.12 கோடி. பின்னர் காரை கேரளாவுக்கு கொண்டு சென்றார். கொச்சியில் தங்கியுள்ள அவர், அவ்வப்போது காரில் வலம் வருகிறார்.


ஒரு மாநிலத்தில் காரை நிரந்தரமாக வைத்து ஓட்ட வேண்டும் என்றால், அங்கு தான் பதிவு செய்ய வேண்டும். ஆகவே இந்த காரை கேரளாவில் பதிவு செய்தால் அரசுக்கு ரூ.20 லட்சம் வரை வரி கட்ட வேண்டும். இதே புதுச்சேரியில் பதிவு செய்தால் ரூ.1.15 லட்சம் வரி கட்டினால் மோதும். புதுச்சேரியில் ஒரு காரை பதிவு செய்ய வேண்டும் என்றால் நிரந்தர முகவரி இருக்க வேண்டும். 


இதற்காக அமலாபால் புதுச்சேரியில் செயின்ட் தெரெசா தெரு திலாசபட்டி என்ற முகவரியில் காரை பதிவு செய்துள்ளார். பதிவு செய்த அந்த வீட்டில் தங்கியிருப்பது பொறியியல் கல்லூரி மாணவர். இது குறித்து அந்த மாணவனுக்கு எதுவும் தெரியாது. 


புதுச்சேரியில் காரை பதிவு செய்ததன் மூலம் நடிகை அமலாபால் பல லட்சம் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த தகவல் அறிந்ததும் எர்ணாகுளம் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.