பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் ரச்சிதா சொன்ன முக்கிய தகவல்!
Bigg Boss Tamil Season 6: ரச்சிதா மகாலக்ஷ்மி தான் பிக்பாஸ் வீட்டை வெளியேறிய முதல் கையோடு தனது ரசிகர்களுக்கு சமூக வலைதளம் மூலம் நன்றியினை தெரிவித்திருக்கிறார்.
Bigg Boss Tamil Season 6: பெங்களூருவை பிறப்பிடமாக கொண்ட ரச்சிதா பல தமிழ் ரசிகர்களின் பேவரைட் நடிகை. பிரிவோம் சிந்திப்போம் தொடரின் மூலம் மக்களிடையே அறிமுகமானவர் சரவணன் மீனாட்சி தொடரின் மூலமாக ரசிகர்களின் மனதில் நிலைத்து நின்று தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். எந்த அளவிற்கு இவருக்கு புகழ் கிடைத்ததோ அந்த அளவிற்கு இவர் ட்ரோல் செய்யப்பட்டார், இருப்பினும் அதை கண்டுகொள்ளாது இவர் தொடர்ந்து தனது நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். பிரிவோம் சிந்திப்போம் தொடரில் இவருக்கு ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் சில மனக்கசப்புகள் காரணமாக இருவரும் தற்போது ஒருவரையொருவர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் ரச்சிதாவிற்கு பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது, 21 போட்டியாளர்களுள் இவரும் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். இவர் இந்நிகழ்ச்சியில் தன்னை முழுமையாக வெளிக்காட்டவில்லை என்று ரசிகர்கள் ஒருபக்கம் கூறினாலும், மறுபக்கம் இவரது கியூட்னசை ரசித்து கொண்டுதான் இருந்தார்கள். வழக்கம்போல ரசிகர்கள் இவருக்கும் ஆர்மி தொடங்கி இவரது புகழை பரப்பி வந்தனர், கடிதம் எழுதும் டாஸ்க்கில் இவர் சிந்திய கண்ணீர் பலரது கண்களையும் நனைக்கும்படி செய்தது. ஸ்கூல் டாஸ்கில் இவருக்கும், விக்ரமனுக்கும் இடையேயான காட்சிகள் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. பெரிதாக யாரிடமும் சண்டையிட்டு கொள்ளாமல், மெச்சூர்டாக எல்லாத்தையும் கையாண்டு வந்த ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிநாள் வரை இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் அவர்களுக்கு பேரிடியாக ஒரு சம்பவம் நிகழ்ந்துவிட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிக்பாஸ் வீட்டை விட்டு ரச்சிதா வெளியேறிவிட்டார், பிக்பாஸ் வீட்டில் 91 நாட்கள் இருந்த இவரது பயணம் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. ரசிகர்களில் சிலர் இவர் 91 நாட்கள் வீட்டில் இருந்ததற்கு பாராட்டுக்களையும், இன்னும் சில ரசிகர்கள் இவர் கூடுதலாக ஒரு வாரம் இருந்திருந்தால் நேரடியாக பைனலுக்கு சென்றிருப்பார் என்றும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரச்சிதா தான் பிக்பாஸ் வீட்டை வெளியேறிய முதல் கையோடு தனது ரசிகர்களுக்கு சமூக வலைதளம் மூலம் நன்றியினை தெரிவித்திருக்கிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக்பாஸ் வீட்டில் இறுதி நாளின் போது எடுக்கப்பட்ட தனது புகைப்படத்தை பகிர்ந்து, அதனுடன் 'இந்தப் பயணத்தில் நீங்கள் எனக்கு அளித்த அன்பு மற்றும் ஆதரவிற்கு அனைவருக்கும் நன்றி, நீங்கள் இல்லாமல் என்னால் இந்த சாதனையை அடைந்திருக்க முடியாது. உங்களின் அளவுகடந்த அன்புக்கு நான் உண்மையிலேயே நன்றியுள்ளவளாக இருப்பதோடு மகிழ்ச்சியாக உணர்கிறேன்' என்று எழுதியுள்ளார்.
மேலும் படிக்க | KGF 3 படத்தில் ராக்கி பாய் இல்லையா? அதிருப்தியில் யாஷ் ரசிகர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ