வதோதரா: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ராயீஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்லும் விதமாக குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா பகுதிக்கு சென்றிருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது ராஜ்தானி விரைவு ரயில் வண்டியில் வந்த ஷாரூக்கானை காண ரசிகர்கள் குவிந்து இருந்தனர். 


நேற்று இரவு ரயில் நிலையத்தில் சுமார் 10 நிமிடம் ஷாரூக்கானை காண ரசிகர்கள் திரண்டு இருந்தனர். 


இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு போலீசார் காயம் அடைந்தனர். 


போலீசார் தரப்பில் கூறுகயில்:-


ரயில் புறப்பட்ட பிறகு கூட அதனை பின் தொடர்ந்து ரசிகர்கள் ஓடினர். அதனால் ஒருவர் மீது ஒருவர் கீழே சரிந்து விழுந்தனர். கூட்டத்தை கலைக்க லேசான தடியடியும் நடத்தப்பட்டது என்றனர்.