மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம்- சமாளிக்கும் லாரன்ஸ்!!
மக்கள் சூப்பர் ஸ்டார் என்று எனக்குத் தெரியாமலேயே படத்தில் போட்டுவிட்டார்கள். எனக்கு அந்தப் பட்டம் வேண்டாம்என்று கூறியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் லாரன்ஸ் பெயருக்கு முன்னால் மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற பட்டப் பெயரைப் பயன்படுத்தியுள்ளனர்.
இதைப் பார்த்த ரசிகர்கள், பொது மக்கள் மத்தியில் லாரன்ஸ் மீது வெறுப்பு கிளம்பிவிட்டது. சமூக வலைத் தளங்களில் அவரை கடுமையாக விமர்சித்து பதிவுகள் போட்டு வருகின்றனர்.
இந்த எதிர்ப்பை லாரன்ஸ் கனவிலும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். எனவே உடனடியாக இது எனக்குத் தெரியாமல் நடந்துவிட்டது என்று இயக்குநர் சமாளித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.