ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 'பிக் பாஸ்' புகழ் ஓவியா நடிப்பில் உருவான காஞ்சனா-3 படத்தில் வெளியீட்டு தேதி அறிவிப்பு! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் படம் 'காஞ்சனா 3'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஓவியா, வேதிகா, நிகிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். வேதிகா மற்றும் ஓவியா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.


சமீபத்தல், படப்பிடிப்பு இடத்தில் ராகவா லாரன்ஸுடன் ஓவியா மற்றும் வேதிகா இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. கடந்த 2017 ஆம் தேதி ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் முனி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து காஞ்சனா, காஞ்சனா2-வ இயக்கினார். 


இந்த படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதன் வெற்றியை தொடர்ந்து, தற்போது காஞ்சனா 3 படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பில் முதற்கட்டமாக வேதிகாவின் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதன் பிறகு தொடர்ச்சியான படப்பிடிப்பில் ஓவியாவின் காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. 


பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா நடிக்கும் முதல் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தினை டிசம்பரில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறைகளை சிறப்பாக்க கொண்டாட இப்படம் டிசம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். 


காஞ்சனா-3 படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார் என்பது குரிப்பிடதக்கத!