நடிகை ரைஸா வில்சன் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டாதாரி 2 படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பின்னர் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் மூலம் பிரபலம் ஆனார். அந்நிகழ்ச்சிக்குப் பிறகு தன்னுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக 'பியார் பிரேமா காதல்' படத்தில் நடித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் பின் தற்போது இவர் மீண்டும் ஹரிஷ் கல்யாணின் 'தனுசு ராசி நேயர்களே' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்.


இந்நிலையில் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் ரைஸா, தமிழகத்தை மகிழ்விப்பதற்காக நான் ஹரிஷ் கல்யாணுடன் டேட்டிங் செய்யப் போகிறேன்.


 



 


என்று கூறியுள்ளார்