ரஜினியை கொண்டாடி கமலை திட்டும் ரசிகர்கள்; காரணம் இதுதான்
![ரஜினியை கொண்டாடி கமலை திட்டும் ரசிகர்கள்; காரணம் இதுதான் ரஜினியை கொண்டாடி கமலை திட்டும் ரசிகர்கள்; காரணம் இதுதான்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2022/08/14/242722-rajinifans.jpg?itok=_ySsiVI5)
திரைத்துறைக்கு அடியெடுத்து வைத்து 47 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரஜினிகாந்தை கொண்டாடும் அதேவேளையில், கமல்ஹாசனை திட்டி தீர்க்கின்றனர் இணையவாசிகள்.
தமிழ் திரையுலகின் உட்சநட்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் தனக்கென பெரிய மார்க்கெட்டை வைத்திருக்கும் அவருக்கு இன்றளவும் மாஸ் குறையவில்லை. அவர் திரைத்துறைக்கு வந்து சுமார் 47 ஆண்டுகள் ஆகிறது. ஆகஸ்ட் 15 ஆம் தேதியுடன் திரைத்துறையில் அடியெடுத்து வைத்து 47 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இதனையொட்டி சமூகவலைதளங்களில் #47YearsOfRajinismCDP என்ற ஹேஸ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். அந்த ஹேஸ்டேக்கின் கீழ் பொதுவான ரஜினி புகைப்படம் ஒன்றை உருவாக்கி டிரெண்ட் செய்துள்ள ரசிகர்கள், அவரின் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் அந்த புகைப்படத்தில் இடம் பெறச் செய்துள்ளனர்.
அவரின் நடிப்பு மற்றும் ஸ்டைலைக் கொண்டாடும் ரசிகர்கள், சென்னையில் இருக்கும் பிரபலமான தியேட்டர்கள் முன்பு ஆட்டம் பாட்டம் போட்டு அவரைக் கொண்டாடித் தீர்க்கின்றனர். அதேநேரத்தில் கமல்ஹாசனை ரஜினி ரசிகர்கள் சிலர் திட்டித் தீர்க்கின்றனர். நடிப்பின் உட்சமாக இருக்கும் அவரை, ரஜினியே வெளிப்படையாக பாராட்டியுள்ளார். ஆனால் இணையத்தில் இருக்கும் ரஜினி ரசிகர்கள் சிலர், கமல் நடித்த படங்கள் எந்தெந்த மொழிகளில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்பதை, வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
மேலும் படிக்க | போதைப் பழக்கத்தை ஊக்குவிக்கும் 'விருமன்' பாடல்? - கிளம்பியது புதிய சர்ச்சை!
உதாரணமாக விருமாண்டி படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள், எந்தெந்த படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்பதை அந்தப் படத்தின் காட்சிகளோடு ஒப்பீடு செய்து வீடியோ வெளியிட்டுள்ளனர். இதற்கு கமலின் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். கமலின் நடிப்புக்கும், திறமைக்கும் இருக்கும் புகழ்வெளிச்சத்தை மங்கச் செய்வதற்காக தேவையில்லாத விஷயங்களை சிலர் பரப்புவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தற்போது கமல்ஹாசன் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் இந்தியன் படத்தில் நடிப்பதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்வதற்காகவும், சில மேக்கப் டெஸ்டுகள் எடுப்பதற்காகவும் அங்கு தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த், ஜெய்லர் படத்தின் சூட்டிங்கில் விரைவில் கலந்து கொள்ள இருக்கிறார்.
மேலும் படிக்க | ’ஐ லவ் யூ’ அதிதி சங்கருக்கு ரூட் போட்ட பிரபல காமெடி நடிகர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ