நெல்சனுடன் ரஜினி இணையும் படத்தின் கதை இதுவா?
முழு நீள காமெடி கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம் நடிகர் ரஜினிகாந்த்
அண்ணாத்த படத்திற்குப் பிறகு ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்த், அடுத்த படத்திற்கான கதைகளையும் தேடிக் கொண்டிருகிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி, வெற்றி மாறன், கார்த்திக் சுப்புராஜ், பால்கி உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்களிடமும் ரஜினி கதை கேட்டிருப்பதாக தகவல் வெளியானது.
மேலும் படிக்க | ரஜினியை இயக்கி இருந்தால் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் -இயக்குநர் உருக்கம்
படையப்பா படத்தை இயக்கிய பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் படத்தில் நடிக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. இப்போது புதிதாக அந்தப் பட்டியலில் இணைந்திருப்பவர் நெல்சன் திலீப்குமார். இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் ’பீஸ்ட்’ திரைப்படத்தின் இயக்கிக் கொண்டிருக்கும் அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் கதை ஒன்றை கூறியிருக்கிறார். முழுநீள காமெடி கதையம்சம் கொண்ட படமாக இருக்க வேண்டும் என எண்ணியுள்ள ரஜினிகாந்துக்கு, இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் கதை பிடித்திருக்கிறதாம்.
ரஜினிகாந்த் கடைசியாக நடித்த ’அண்ணாத்த’ திரைப்படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம், இந்தப் படத்தையும் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இசை அனிரூத் அமைக்கவுள்ளாராம். இந்தக் கூட்டணி உருவானால், சன்பிக்சர்ஸ் - நெல்சன் திலீப்குமார் - அனிரூத் கூட்டணியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது திரைப்படம் உருவாகும். இந்தக் கூட்டணியில் தான் பீஸ்ட் திரைப்படமும் உருவாகிக் கொண்டிருக்கிறது. பேச்சுவாரத்தைகள் முடிவடைந்துள்ள நிலையில், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் (பிப்வரி 10) வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து; டிபியை மாற்றிய சௌந்தர்யா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR