ரஜினி ரசிகர்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் 31-ம் தேதி நடைபெற உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஜினி ரசிகர் மன்றத்தில் மாநில பொறுப்பாளராக இருக்கும் சுதாகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலேசனை நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் மற்றும் செயலாளர் சென்னை வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்கள் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ரஜினி பா.ஜ.கவில் இணைய வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் கருத்துகளை அறியவே இந்த ஆலோசனை என்றும் சொல்லப்படுகிறது. 


இந்த கூட்டத்தில் ரஜினி பங்கேற்க மாட்டார் எனவும் கூறப்படுகிறது. ஆனால் அடுத்த மாதம் 2-ம் தேதி ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கலாம் என தெரிகிறது.