நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படத்தின் sneak peek வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘சர்கார்’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.


படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மோஷன் போஸ்டரை வெளியிட்டிருந்த படக்குழு தற்போது திரைப்படத்தின் sneak peek காட்சியினை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளனர்.



முன்னதாக, "தர்பார்" படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லரை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகி ரசிகர்களை திணற செய்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் sneak peek காட்சியினை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.


இதனிடையே படத்தின் ப்ரமோஷன் பணிக்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் கபாலி படத்தை போன்று விமானத்தில் தர்பார் படத்தின் போஸ்ட்டரை ஒட்டி ப்ரோமோஷன் செய்துள்ளனர் படக்குழுவினர்.