தமிழ் சினிமாவின் உட்சநட்சத்திரமாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) தனது 72வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு தமிழ் திரையுலகம் உள்ளிட்ட இந்திய திரை பிரபலங்கள் அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவர் ஆரோக்கியமான உடல் நலத்தோடு, இன்னும் பல நல்ல திரைப்படங்களில் நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்று வாழ்த்தியுள்ளனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது 72வது பிறந்தநாளையொட்டி, ரசிகர்களுக்கும், ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு ஒரு சூப்பரான கிஃப்ட் ஒன்றை அறிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | Happy Birthday Super Star Rajinikanth: ‘ரஜினி’ என்பது பெயரல்ல ஒரு புரட்சி!!


அந்த கிஃப்ட் என்னவென்றால் சமூகத்தில் ஏழை, எளிய மற்றும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த 100 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகும் வகையில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்காக ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பயிற்சி அமைப்பையும் தொடங்கியுள்ள ரஜினிகாந்த், இந்த பவுண்டேஷனுக்கு நிர்வாகிகளாக வழக்கறிஞர் சத்தியக்குமார் மற்றும் எம்.சூர்யா ஆகியோரை நியமித்துள்ளார். ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி எம்.வி.சுதாகர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.


 



பிறந்தநாளையொட்டி ரஜினிகாந்த் வெளியிட்ட இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கும், அரசு தேர்வுக்கு தயாராகும் ஏழை, எளிய மாணவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுப் பணிக்கு செல்ல வேண்டும் என்ற கனவில் இருக்கும் லட்சக்கணக்கான தமிழக மாணவர்கள் இப்போது இருந்து, அந்த தேர்வுக்கான தயாரிப்பை முழுவீச்சில் தொடங்கியுள்ளனர். பலர் பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்கின்றனர். பயிற்சிக் கட்டணம் செலுத்த முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே தயாராகி வருகின்றனர். அப்படியான மாணவர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பவுண்டேஷனை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு அமைந்துள்ளது.


ALSO READ | 26 வருடங்களுக்கு பிறகு தீபாவளி தினத்தில் வெளியாகும் ரஜினி படம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR