விக்ரமிற்கு சிறந்த திருப்புனையாக அமைந்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ள படம் மகான்.  முதல்முறையாக தந்தையும் மகனும் ஒன்றாக இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் கேரியரில் இந்த படம் சிறந்த படமாக அமைந்துள்ளது.  அமேசான் பிரைம் வீடியோ இயங்குதளத்தில் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.  இந்த திரைப்படத்தில் பாபி சிம்ஹா, வாணி போஜன், சனந்த், தீபக் ரமேஷ், நரேன் போன்ற பலர் நடித்துள்ளனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | மகான் படம் எப்படி இருக்கு?- திரை விமர்சனம்


கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அனைவரது நடிப்பும் பாராட்டை பெற்றுள்ளது.  எந்தவித கதாபாத்திரையும் துணிச்சலுடன் ஏற்று நடிக்கும் நடிகர் விக்ரம் இந்த படத்திலும் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார், அதேபோல துருவ் விக்ரமும் தனது தந்தைக்கு ஈடாக நடித்து கலக்கியுள்ளார்.  கார்த்திக் சுப்புராஜுக்கே உரிய ஸ்டைலில் இப்படம் அமைந்து இருக்கிறது.  சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்து இருக்கிறது.



இந்த படத்தை பார்த்த பலரும் பாராட்டி வருகையில், தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் நடிகர் ரஜினிகாந்த இந்த படத்தை பார்த்து விட்டு பாராட்டை தெரிவித்துள்ளார்.  "மிக அருமையான படம், அனைவரது கதாபாத்திரமும் சிறப்பாக உள்ளது " என்று மனம் மகிழ்ந்து பாராட்டு தெரிவித்துள்ளார்.  நடிகர் ரஜினியின் பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இப்படத்தின் இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.  அதில், ஆம், தலைவர் மகான் படத்தை மிகவும் விரும்புகிறார், என்னை அழைத்ததற்கு நன்றி தலைவா, நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம்" என்று நன்றியுரைத்துள்ளார்.  ஏற்கனவே ரஜினிகாந்த பல படங்களை பாராட்டிய நிலையில் தற்போது மகான் படத்தையும் பாராட்டி இருக்கிறார்.


 



இதற்கு முன்பு ரஜினியை வைத்து பேட்ட என்ற மாஸ் ஹிட் படத்தை இயக்கி இருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.  அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு சிறிது தினங்களுக்கு முன்பு வெளியானது.  இந்த படத்தை நெல்சன் இயக்க அனிருத் இசையமைக்கிறார்.


மேலும் படிக்க | ரஜினிகாந்த் - நெல்சன் புதிய படம்! சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR