ரஜினிகாந்த் - நெல்சன் புதிய படம்! சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 10, 2022, 06:16 PM IST
  • ரஜினிகாந்த் படத்தை இயக்கும் நெல்சன் திலீப்குமார்
  • அதிகாரப்பூர்வமாக அறிவித்தது சன்பிக்சர்ஸ் நிறுவனம்
  • விரைவில் சூட்டிங் தொடங்கும் என அறிவிப்பு
ரஜினிகாந்த் - நெல்சன் புதிய படம்! சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு title=

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது படத்தை, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். கோலிவுட்டில் ‘கோலமாவு கோகிலா’  மூலம் காலடி எடுத்து வைத்த இயக்குநர் நெல்சனுக்கு, அந்தப் படம் மிகப்பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது. வசூல் ரீதியாகவும் ஹிட்டானதால், அடுத்த படத்தில் தனது நண்பரான சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘டாக்டர்’ படத்தை இயக்கினார்.

மேலும் படிக்க | அஜித் அரசியலுக்கு வரனும்னு சொன்னதே தப்பு: குமுறிய இயக்குநர்

இந்தப் படம் இருவருக்குமான சினிமா கிராஃபை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு இடையே வெளியான டாக்டர், வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து, சிவகார்த்திகேயனை 100 கோடி கிளப்பில் கொண்டுபோய் சேர்த்தது. இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு, இளைய தளபதி விஜயை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படம், வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்டுகளால் மகிழ்ச்சியில் இருந்த நெல்சன் திலீப்குமாருக்கு, தமிழின் உட்சபட்ச நட்சத்திரமாக கருதப்படும் ’சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. ரஜினிகாந்தின் 169வது படத்தை நெல்சன் இயக்குகிறார். இந்தப் படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அண்ணாத்த படத்தை முடித்த பிறகு நீண்ட ஓய்வில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், புதிய படத்துக்கான வித்தியாசமான கதையை தேடிக் கொண்டிருந்தார். அவருக்கு நெல்சன் திலீப்குமாரின் கதை பிடித்திருந்ததால், உடனே டிக் அடித்துள்ளார்.

பீஸ்ட் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அந்தப் படத்தின் ரிலீஸூக்குப் பிறகு ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் சூட்டிங் தொடங்குகிறது. அனிரூத் இசையமைக்கிறார்

மேலும் படிக்க | பூஜையுடன் தொடங்கப்பட்ட சிவகார்த்திகேயனின் SK20 படப்பிடிப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News