‘2.0’ படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது!!
'2.0' படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன், சுதன்ஷூ பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '2.0. லைக்கா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது. மேலும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் ரஜினி, சங்கர், ஏ.ஆர்.ரகுமான், அக்ஷய் குமார், ரசூல் பூக்குட்டி, உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். தமிழ் திரையுல கை சேர்ந்த நடிகர் ஆர்யா, விஜய் ஆண்டனி, எடிட்டர் ஆண்டனி, எழுத்தாளர் ஜெயமோகன், ஆர்ட் டைரக்டர் முத்துராஜ், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா அதி நவீன தொழில்நுட்பத்தில் மும்பையில் உள்ள யாஷ்ராஜ் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இன்று '2.0' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.