நடிகையின் காலை வருடிய பிரபல இயக்குநர்... வீடியோ வைரல்
இப்படி ஒரு அழகியை படைத்ததற்கு கடவுளுக்கு நன்றி என்ற கூறியவாரே நடிகையின் கால் பாதத்தை நாக்கால் வருடி, அருவறுக்கத்தக்க வகையில் பிரபல இயக்குநர் செய்த செயல் இணையத்தை அதிரவைத்துள்ளது.
சர்ச்சைக்கு பெயர் போன இயக்குநர்களில், ராம் கோபால் வர்மாவும் ஒருவர். இவரின் படங்கள் மட்டுமின்றி பொதுவெளியில் இவரின் சில செயல்களும், பேச்சுகளும் பலமுறை சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ராம் கோபால் வர்மா என்ற பெயர் வந்தாலே சமூக வலைதளமே அதிரும் அளவிற்கு பல சம்பவங்களும் நடந்துள்ளன.
அந்த வகையில், தற்போது மீண்டும் புதிய விவகாரத்தில் ராம் கோபால் வர்மா, இணையத்தை அதிரவைத்துள்ளார். சமூக வலைதள பிரபலமான ஆசு ரெட்டியுடன் அவர் இருக்கும் புகைப்படத்தையும், வீடியோவையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்றிரவு 8. 53 மணியளவில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில், ஆசு ரெட்டி சோபாவில் அமர்ந்திருக்க அவரின் கால் அருகில் ராம் கோபால் வர்மா உட்கார்ந்திருக்கிறார். மேலும் அந்த பதிவில்,"ஆபத்தான (Dangerous) என்னுடன் இரட்டிப்பு ஆபத்தான (Double Dangerous) ஆசு ரெட்டி முழு வீடியோவை இன்று (அதாவது நேற்று) இரவு 9.30 மணிக்கு வெளியிடுகிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க | வாரிசு தெலுங்கில் வெளியாகவில்லை என்றால் என்ன? Hi 5 பட விழாவில் கே ராஜன் பேச்சு!
ராம் கோபால் வர்மா இயக்கி, ஆசு ரெட்டி நடித்திருக்கும் திரைப்படத்தின் பெயர் Dangerous. இந்த படத்தையொட்டி, ராம் கோபால் வர்மா எடுத்த பேட்டியின் புகைப்படத்தை அவர் ட்விட்டரில் பகிர்ந்தார். தொடர்ந்து, ஆசு ரெட்டியுடனான அவரது பேட்டியை தனது யூ-ட்யூப் சேனலில் அவர் வெளியிட்டிருந்தார். அதில், ஆசு ரெட்டியின் காலின் அருகே அமர்ந்தவாரே பேட்டி எடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து, அவர் ஆசு ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வீடியோ, அவரது கால் பாதத்தை ராம் கோபால் வர்மா முத்தமிடும் காட்சியை பதிவிட்டிருந்தார். ஆனால், முழுமையான பேட்டியில், அவரது கால் பாதத்தை முத்தமிட்டது மட்டுமின்றி, பாதத்தை நாக்கால் வருடி அவர் செய்த செயல் சமூக வலைதளத்தில் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஆசு ரெட்டியை குறிப்பிட்டு, இப்படி ஒரு அழகியை படைத்ததற்கு கடவுளுக்கு நன்றி என்ற கூறியவாரே அவரது கால் பாதத்தை நாக்கால் வருடி, அந்த செயலை செய்ததாக தெரிகிறது.
அமெரிக்காவை வளர்ந்த ஆசு ரெட்டி, இன்ஸ்டாகிராமில் 18 லட்சம் பாளோயர்ஸை வைத்துள்ளார். யூ-ட்யூப்பில் அவரை 2 லட்சத்து 40 ஆயிரத்து பேர் பின்பற்றுகின்றனர். இவர் ராம் கோபால் வர்மாவின் தீவிர ரசிகையாக தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆசு ரெட்டி தனது யூ-ட்யூப் சேனலில் பல தெலுங்கு பிரபலங்களை பேட்டியெடுத்துள்ளார். கடந்தாண்டு, "Nine Bold Reasons Why I Love RGV" என்ற தலைப்பில் ஆசு ரெட்டி, ராம் கோபால் வர்மா குறித்து வீடியோ வெளியிட்டிருந்தார். ராம் கோபால் வர்மாவின் Dangerous படம் நாளை மறுதினம் (டிச. 9) அன்று வெளியாகிறது.
மேலும் படிக்க | பாக்கியலட்சுமி சீரியலில் பிக்பாஸ் அசீம், வைரலாகும் போட்டோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ