மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணனின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் வலைதள தொடர் ‘குயின்'. இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் எம். ஜி. ராமச்சந்திரனின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


இந்த வெப் சீரிஸின் சில எபிசோடுகளை ‘கிடாரி' திரைப்பட இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொடரின் தலைப்புடனான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. அதன்பின் சமீபத்தில் இந்த வெப் சீரிஸின் டீசர் வெளியானது. 26 நொடிகள் நீளம் கொண்ட அந்த டீசரில் ஜெயலலிதாவின் பள்ளிப் பருவம், திரைத்துறை வாழ்க்கை, அரசியல் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில் தற்போது ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் ஜெயலலிதாவின் இளம் வயது புகைப்படத்தைப் போலவே இருப்பதால் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.