பிக் பாஸ் 4 இன் முடிவடைந்த சீசனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்களில் நடிகை ரம்யா பாண்டியன் ஒருவராக இருந்தார். மேலும் இந்த சீசன் முழுவதும் அவருக்கு ஆதரவாக ரசிகர்களின் இருந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரம்யா பாண்டியன் அனைத்து போட்டியாளர்களுக்கும் கடுமையான போட்டியாளராக இருந்தார், மேலும் இந்த சீசன் (Kamal Haasan) இன் ஒரே பெண் இறுதிப் போட்டியாளராக இருந்தார். இந்த நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஐவரில் ஒருவர் ரம்யா பாண்டியன் இறுதி நாளன்று வெளியேற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இந்த நிலையில் ரம்யா பாண்டியன் பிக்பாஸ் (Bigg Boss Tamilநிகழ்ச்சியில் இருந்து சிங்கப்பெண்ணாக வெளியேறி வீட்டுக்குச் சென்றபோது அவரை அவரது குடும்பத்தினர் சிறப்புடன் வரவேற்றி அசத்தி உள்ளனர். ரம்யா பாண்டியன் காரிலிருந்து இறங்கும் போது பட்டாசுகள் வெடிக்க, மேளதாளங்கள் முழங்க மாலை மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. அந்த வீடியோவில் தாயாரும், சகோதரரும், உறவினர்களும் ரம்யா பண்டியனுக்கு ஆரத்தி எடுத்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 


ALSO READ | பிக் பாஸ் சோம் சேகரின் செல்ல நாய் திடீர் மரணம்! வீடியோ!


மேளதாள சத்தத்தை கேட்டவுடன் ரம்யா பாண்டியன் (Ramya Pandianசாலையிலேயே தன்னை வரவேற்க வந்த தோழிகளுடன் ஆடினார். மேலும் உறவினர்களைப் பார்த்து கட்டிப்பிடித்து மகிழ்ச்சி அடைந்தார் ரம்யா பாண்டியன். 105 நாட்களுக்கு பின்னர் ரம்யா பாண்டியன் வீட்டிற்கு வந்ததை அடுத்து அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடினர்.


 



 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR