பிரபல பாப் பாடகர் மேக் மில்லர் தனது 26-வது வயதில் மரணமடைந்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் பிரபல இளம் ராப் பாடகரான மேக் மில்லர் அதிக அளவு போதைப்பொருள் உட்கொண்டதால் தனது இல்லத்தில் வைத்து இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவரது மரணம் குறித்து வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில் இவரது உயிர் இரவு 11.51 மணியளவில் பிரிந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.


மேக் மில்லரின் குடும்பத்தார் மில்லரின் மரணம் குறித்து தெரிவிக்கையில்... “இந்த உலகிற்கு அவன் ஒரு வெளிச்சம் போல் இருந்தான். உங்களின் அனைத்துப் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. எங்களுடைய தனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும். அவனது இறப்பைப் பற்றி வேறு ஏதும் பேச விரும்பவில்லை”  என தெரிவித்துள்ளனர்.



மேக் மில்லரின் இறப்பு, பாப் இசை உலகிலும், அவரது ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இசைக் கலைஞர்கள் பலரும் அவரது மரணத்துக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து வருகின்றனர். மேலும் திறமையான ராப் இசை கலைஞரை இந்த உலகம் இழந்துவிட்டது என சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.



முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் சுவீடன் நாட்டைச் சேர்ந்த 28-வயது பிரபல இசை, நடனக் கலைஞர் அவிச்சி, ஓமானின் மஸ்கட்-ல் மரணம் அடைந்தார். இவரின் இழப்பினை பெரும் வருத்தத்தோடு ஏற்றுக்கொண்ட பாப் ரசிகர்களுக்கு தற்போது மேக் மில்லரின் இறப்பு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது!