இளையதளபதி நடிகர் விஜய், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தை நிறைவு செய்துள்ளார். இந்தப் படத்துக்குப் பிறகு தளபதி 66 பணிகளை தொடங்க உள்ளார். அந்தப் படத்தை பிரபல இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்குகிறார். அவர் ஏற்கனவே தமிழில் தோழா, மகரிஷி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். விஜய் - வம்சி கூட்டணியில் உருவாகும் தளபதி 66 படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பீஸ்ட் முதல் வலிமை; ரஷ்யாவில் படமாக்கப்பட்ட 5 தமிழ் படங்கள்


இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் ஹீரோயின் யார்? என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், சூடான அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் ஹீரோயினை தேர்வு செய்ய திட்டமிட்ட படக்குழு, அதற்காக பல்வேறு ஹீரோயின்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அதில், புஷ்பா படம் மூலம் லைம் லைட்டில் இருக்கும் ராஷ்மிகா மந்தனாவிடமும் இந்தப் படத்தில் நடிக்க கதை சொல்லப்பட்டதாம். கதையைக் கேட்ட அவர், விஜய்க்கு ஜோடியாக தளபதி 66-ல் நடிக்க பச்சைக் கொடி காட்டியுள்ளாராம்.



விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. அண்மைக்காலமாக அரசியல் களத்தில் படு சுறுசுறுப்பாக விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருவதால், ஒருவேளை இந்தப் படத்தின் கதை அரசியல் சார்ந்த கதையாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், இந்தப் படம் அரசியல் சார்ந்த படம் இல்லை என படத்தின் இயக்குநர் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தோழா மற்றும் மகரிஷி போன்ற உணர்வு ரீதியான படமாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.  இசையமைப்பாளர் தமன், இப்படத்திற்கு இசையமைக்கிறார். 


மேலும் படிக்க | 'பீஸ்ட்' படத்தின் ஆடியோ லான்ச் எப்போது? வெளியான தகவல்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR