Tamil Cinema News: ராஷ்மிகா மந்தனா ஒரு பிரபலமான நடிகை. அதுவும் தென் இந்தியா படங்களில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பிரபலமாக உள்ளார். எப்படி என்றால், அவர் விரைவில் இந்தி திரையுலகில் அறிமுகமாகப் போகிறார், அதற்கு முன்பு தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் தளபதி விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவித தகவலும் வெளியாகவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna). அவர் தனது இன்ஸ்டாகிராமில் "என்னிடம் எதையும் கேளுங்கள்" அறிவித்திருந்தார். அதில் ஒரு ரசிகர் அவரிடம், "எப்போது நீங்கள் தளபதியுடன் நடிப்பீர்கள்" என்று கேட்டார். அதற்கு ரஷ்மிகா "மிக விரைவில்" எனப் பதில் அளித்துள்ளார். 


பின்னர், விஜய்யை (Actor Vijay) பற்றி ஒரு வார்த்தை சொல்லுமாறு ரசிகர் கேட்டதற்கு, "லவ்" என்று பதில் கூறினார் ரஷ்மிகா மந்தனா.


ALSO READ | #Thalapathy65: விஜய்யின் பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது, குதூகலத்தில் ரசிகர்கள்


தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். தற்போது "பீஸ்ட்" (Beast) படத்தில் விஜய் நடித்து வருகிறார். அந்த படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடிக்கவுள்ளனர்.


இதற்கு அடுத்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் விஜய் நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை அதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கலாம் என ரசிகர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.


ALSO READ | #VaathiComing பாடல் யூடியூபில் 210 மில்லியன் பேர் பார்த்து புதிய சாதனை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR