கோவிலுக்கு போன இடத்தில் நேர்ந்த தர்மசங்கடம்; அவசர அவசரமாக வெளியேறிய ராஷ்மிகா மந்தனா
கவர்ச்சி புயலாக வளம் வரும் ராஷ்மிகா மந்தனாவுக்கு மும்பையில் கோவிலுக்கு போன இடத்தில் தர்ம சங்கடத்தால் அவசர அவசரமாக வெளியேறியுள்ளார்
அடுத்தடுத்து ஹிட்டான படங்களால் புகழ் வெளிச்சத்தில் இருக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருக்கின்றன. புஷ்பா படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழில் இளைய தளபதி விஜய்யுடன் ‘வாரிசு’ படத்தில் நடிக்கும் அவர், பாலிவுட்டிலும் களமிறங்கியுள்ளார். அமித்தாப்பச்சனுடன் குட்பை, ரன்பீர் கபூருடன் அனிமல், சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் மஜ்னு ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். அமித்தாப்பச்சனுடன் நடித்திருக்கும் குட்பை திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | பாலிவுட்டில் கொடி நாட்டும் இசையமைப்பாளர் சாம் CS
இந்நிலையில், மும்பையில் இருக்கும் பிரசித்தி பெற்ற ராஜ கணபதி கோவிலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். அங்கு அவர் வந்திருப்பதை அறிந்தவுடன் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. ஒருகட்டத்தில் ரசிகர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கவே, பாதுகாவலர்களால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட ராஷ்மிகாவுக்கு தர்ம சங்கடமான நிலை உருவானது, சிலர் சீண்டலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. உடனடியாக களத்தில் இறங்கிய காவல்துறை, பத்திரமாக அவரை காருக்கு அழைத்துச் சென்றனர்.
காரில் ஏறிய பிறகு அங்கு சூழ்ந்திருந்த ரசிகர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்த ராஷ்மிகா, சிறிது நேரத்துக்குப் பிறகு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. ராஷ்மிகா தமிழில் சுல்தான் படத்தில் அறிமுகமானார். அந்தப் படத்தில் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்த அவர், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிப் படங்களிலும் நடித்தார். இவர் நடித்தபடங்கள் வெற்றி பெற்றதால் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கிறார். இப்போது பாலிவுட்டிலும் நடிக்கும் அவர், விரைவில் பான் இந்தியா ஸ்டாராகவும் மாறிவிடுவார் என ரசிகர்கள் கிசுகிசுக்கின்றனர்.
மேலும் படிக்க | பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் கொடுத்த பிரபல நடிகை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ