தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார். இயக்குனர் சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுன் (Allu Arjun) கூட்டணியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக புஷ்பா வெளியாக இருக்கிறது.


ALSO READ | Pushpa Update: புஷ்பா படத்தின் முக்கிய அப்டேட் இதோ


மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் ’புஷ்பா’ படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கி விட்டன.


இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகியான ராஷ்மிகா மந்தனாவின் புதிய போஸ்டர் ஒன்றும் அதில் அவருடைய கேரக்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீவள்ளி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.


 



 


ALSO READ | அல்லு அர்ஜுனின் அடுத்த படம்..வெளியானது FIRST LOOK....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR