தூள் கிளப்பும் துணிவு டிரைலர்... வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?
Varisu Release Date : துணிவு படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது.
Varisu Release Date : வரும் பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்த துணிவு திரைப்படமும், விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் திரையரங்குகளில் மோத உள்ளன. பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் என்றாலும் இரு படங்களும் தங்களின் ரிலீஸ் தேதியை ரகசியமாகவே வைத்துள்ளன. ஆனால், ஜன. 12ஆம் தேதிதான் இரண்டு படங்களும் களமிறங்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
துணிவு படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. தொடர்ந்து, யூ-ட்யூபில் அடுத்தடுத்து சாதனை படைத்து வரும் துணிவு டிரைலர் அஜித்தின் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரின் மனதையும் கவர்ந்ததாகவே தெரிகிறது. சமூக வலைதளங்களிலும் அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றுள்ளது. ஆனால், அதிலும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை.
இன்று வாரிசு ட்ரைலர் அப்டேட்?
டிரைலரில் அதுகுறித்த அறிவிப்பு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் சற்று ஏமாற்றம் அடைந்தனர். மறுபுறம், வாரிசு படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பே இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. டிரைலர் குறித்த அறிவிப்பு இன்று வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதில் ரிலீஸ் தேதியும் வெளியாகும் என்று தெரிகிறது.
மேலும் படிக்க | விஜய்க்கு வில்லனாக நடிக்க அர்ஜுன் கேட்ட சம்பளம் - ஆடிப்போன தயாரிப்பு தரப்பு
ஆனால், வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, நேற்று இன்ஸ்டாகிராமில் லைவ் வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, ரசிகர்களின் கேள்விகளுக்கு நேரலையில் பதிலளித்தார். வாரிசு படம் ரிலீஸ் ஆக இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில், மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஜில்லா - வீரம் படத்திற்கு பின்
அப்போது, வாரிசு படம் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, ஜனவரி 11ஆம் தேதி வாரிசு வெளியாகிறது, உங்களின் மனதிற்கு பிடித்த படமாக இருக்கும் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். அதாவது, ஜன. 12ஆம் தேதி வியாழக்கிழமை என்பதால், அஜித்தின் துணிவு அன்றுதான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கையில், ஜன. 11ஆம் தேதியே வாரிசு வெளியானால் துணிவுக்கு முன்னரே விஜய் களம் புகுந்துவிட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
ஏற்கெனவே, தியேட்டர் ஒதுக்கீடு குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், இந்த தேதி மாற்றமும் சில சிக்கல்களை ஏற்படுத்தலாம் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால், இரண்டு படங்களும் ஒரே நாளில், ஒரே சமயத்தில்தான் திரையரங்கில் வெளியாகும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன், விஜய் - அஜித் படங்கள் ஒரே சமயத்தில் இறங்கியது என்றால், அது ஜில்லா - வீரம் தான். அந்த இரண்டு படங்களும் ஒரே நாளில்தான் வெளியாகியிருந்தது. இரண்டு படங்களும் குறிப்பிடத்தக்க வெற்றியை குவித்தனர். எனவே, பொங்கல் ரேஸில் யார் முதலில் தங்களின் ரிலீஸ் தேதியை அறிவிக்கப்போகிறார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
மேலும் படிக்க | துணிவு ட்ரெய்லர் - ஒரு மணி நேரத்தில் செய்த சாதனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ