வாரிசு, துணிவுக்கு பிறகு மீண்டும் மோதும் விஜய்-அஜித் படங்கள்!

'வாரிசு' மற்றும் 'துணிவு' படங்களை தொடர்ந்து விஜய்யின் 'தளபதி 67' படமும், அஜித்தின் 'ஏகே 62' படமும் ஒரே சமயத்தில் மோதிக்கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Dec 29, 2022, 09:32 AM IST
  • வாரிசு பொங்கல் தினத்தில் வெளியாகிறது.
  • துணிவு படமும் அதே தேதியில் வெளியாகிறது.
  • ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.
வாரிசு, துணிவுக்கு பிறகு மீண்டும் மோதும் விஜய்-அஜித் படங்கள்! title=

தமிழ் சினிமாவின் இருபெரும் ஜாம்பவான்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் தனித்தனியாக வெளியானாலே மிகப்பெரியளவில் எதிர்ப்பார்ப்பு இருக்கும்.  அப்படி இருக்கையில் இரண்டு பெரிய நடிகர்களின் ஒரே சமயத்தில் வெளியானால் எதிர்பார்பார்ப்பு எப்படி இருக்கும் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.  2014ம் ஆண்டு பொங்கல் பண்டிகை சமயத்தில் விஜய் நடிப்பில் 'ஜில்லா' படமும், அஜித் நடிப்பில் 'வீரம்' படமும் மோதிக்கொண்டதையடுத்து, கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விஜய்யின் 'வாரிசு' படமும், அஜித்தின் 'துணிவு' படம் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை சமயத்தில் மோதிக்கொள்ளவிருக்கிறது.  வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு படங்களும் 2023ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதியில் வெளியாகவுள்ளது.

மேலும் படிக்க: ரசிகர்களின் தாகம் தணிக்கும் நோரா ஃபதேஹியின் கடற்கரை புகைப்படங்கள்

 

இரண்டு பெரிய நடிகர்களின் படங்களும் வெளியாக இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் படத்தின் ட்ரைலரை காண ஆர்வமுடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.  வாரிசா? துணிவா? எந்த படம் வெற்றிக்கொடி நாட்டப்போகிறது என்று ஏற்கனவே பனிப்போர் ஆரம்பித்துவிட்ட நிலையில், இந்த மோதல் இந்த இரண்டு படங்களோடு மட்டும் முடியப்போவதில்லை.  வாரிசு மற்றும் துணிவை தொடர்ந்து அடுத்த படங்களிலும் இரு நடிகர்களும் பாக்ஸ் ஆபிசில் மோதிக்கொள்ளவிருக்கின்றனர்.  ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 'தளபதி 67' படத்தில் நடிக்கப்போவதாகவும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் 'ஏகே 62' படத்தில் நடிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் விஜய்யின் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜனவரி மாத முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது.  அதேபோல விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கப்போகும் 'ஏகே 62' படத்தின் படப்பிடிப்பும் அதே சமயத்தில் தான் தொடங்கவிருக்கிறது.  2023ம் ஆண்டின் பொங்கல் பண்டிகை சமயத்தில் 'வாரிசு' மற்றும் 'துணிவு' வெள்ளியாகுவது போல, அதே ஆண்டின் தீபாவளி பண்டிகை சமயத்தில் விஜய்யின் 'தளபதி 67' மற்றும் அஜித்தின் ஏகே 62 படங்களும் மோதிக்கொள்ளும் என்று கூறப்படுகிறது.  இப்போது 'வாரிசு'-'துணிவு' என்று சமூக வலைத்தளங்களில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள் இனிமேல் 'தளபதி 67' - 'ஏகே 62' என்று அடித்துக்கொள்ள போகின்றனர்.

மேலும் படிக்க: ஏங்கும் ரசிகர்கள்! மயக்கும் தேகம் "எமி ஜாக்சன்" கில்லர் போட்டோஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News