அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் 'KGF: Chapter 2 திரைப்படத்தின் மற்றுமொரு  First Look வெளியாகி அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிக்கும் ரவீனா டாண்டனின் First Look அருமையாக இருக்கிறது.
'KGF திரைப்படம் முதலில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. அதன் இரண்டாம் பாகம் 'KGF: Chapter 2 முதல் பாகத்தை விட மிகவும் நன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடித்துள்ள சஞ்சய் தத், யஷ் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டியின் First Look போஸ்டர்களுக்கு பிறகு இது ரவீணா டாண்டனின் First Look முறை.
பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் ரவீணா டாண்டன், கமலஹாசனின் மிகவும் பேசப்பட்ட திரைப்படமான ‘ஆளவந்தான்’ திரைப்படத்தில் அசத்தலாக நடித்து, தென்னிந்திய ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தவர். அடுத்த ஆண்டு டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் (Disney+ Hotstar) பிரீமியர் வெளியாகவுள்ளது. தற்போது 'KGF: Chapter 2 படப்பிடிப்பின் கடைசி கட்டத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கும் நிலையில், திரைப்பட தயாரிப்பாளர்கள், ரசிகர்களுக்கு அவ்வப்போது படம் தொடர்பான செய்திகளை  தொடர்ந்து கொடுத்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'KGF: Chapter 2  திரைப்படத்தில் தான் எப்படி தோன்றப் போகிறோம் என்பதை ரவீனா டாண்டன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ரவீணாவின் First Look தோற்றம், அவரது கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்ற பலவிதமான யூகங்களை எழுப்பியிருக்கிறது.


கரும் சிவப்பு நிற உடையணிந்த ரவீனாவின் தோற்றம் கண்களைக் கவரும் விதத்தில் இருந்தாலும், அவர் கண்மூடி ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறாரா அல்லது தியானத்தில் ஆழ்ந்து விட்டாரா என்ற எண்ணம் எழுகிறது. ரவீணாவின் தோற்றம் திரைப்படத்தை பார்க்கும் ஆவலைத் தூண்டுகிரது.
KGF: Chapter 2 திரைப்படத்தில், ரவீணா டாண்டன், 1981 ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்பதை காட்சிப்படுத்தும்.  சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தென்னிந்திய சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் ரவீணாவின் ஆளுமையை பார்க்க ரசிகர்கள் மட்டுமல்ல, திரையுலகே காத்துக் கொண்டிருக்கிறது. 
சில ஆண்டுகளுக்கு பிறகு திரையில் தோன்றினாலும், ஒரு சக்திவாய்ந்த நபராக வரவிருக்கிறார் ரவீணா டாண்டன்.    



COVID-19 தொற்றுநோய் காரணமாக திரைப்படங்களின் படப்பிடிப்பு நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  அது KGF: Chapter 2வையும் விட்டு வைக்கவில்லை. தற்போது அன்லாக் நடைமுறை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு, நிலைமைகள் இயல்புக்கு திரும்புவதால், பலத்த முன்னேற்பாடுகள், பாதுகாப்புடன் KGF: Chapter 2 திரைப்படப் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது 
2018 ஆம் ஆண்டில் வெளியான KGF திரைப்படம் இந்திய திரையுலகையே கலக்கியது.  மீண்டும் கோலார் தங்க வயலுக்கு அழைத்துச் செல்லும் திரைப்படத்தைப் பார்க்க அனைவரும் ஆவலுடன் இருக்கிறார்கள். 
கே.ஜி.எஃப்: அத்தியாயம் 2, இந்த ஆண்டு அக்டோபரில் வெளியாவதாக திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது திரைப்படத்தின் வெளியீடு 2021ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் டிரெய்லராக இது போன்ற First Look தோற்றங்கள் வெளியாவது தான் இன்றைய டிரெண்ட்...


தொடர்புடைய செய்தி | KGF: Chapter 2 எப்போது வெளியாகும் தெரியுமா? 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR