டிஸ்பிளே பெயரை மாற்றிய சமந்தா; இதுதான் காரணமா?
சமூக வலைதளங்களில் சமந்தா அக்கினேனி என்ற தனது பெயரை மாற்றியிருக்கிறார் நடிகை சமந்தா.
தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக இருப்பவர் நடிகை சமந்தா. திறமையான நடிகை, இயற்கை ஆர்வலர் என பல முகங்களைக் கொண்டவர் நடிகை சமந்தா.
கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை நடிகை சமந்தா (Samantha Akkineni) திருமணம் செய்துகொண்டார். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்த இவர்களின் திருமணத்திற்குப் பிறகு நடிகை சமந்தா ஹைதராபாதில் வசித்து வருகிறார். அத்துடன், நடிகை சமந்தா ரூத் பிரபு என்று இருந்த தனது சமூக வலைதள பக்கங்களின் பெயரை நாக சைதன்யாவின் (Naga Chaitanya) குடும்பப் பெயரான அக்கினேனியை சேர்த்து சமந்தா அக்கினேனி என்று மாற்றிக்கொண்டார்.
ALSO READ | துள்ளி குதித்து குழந்தை போல் பலூன் விளையாடும் சமந்தா; வீடியோ வைரல்
இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள தனது டிஸ்பிளே பெயரை நடிகை சமந்தா மாற்றி உள்ளார். தற்போது 'S'என்று மட்டுமே டிஸ்பிளே பெயர் உள்ளது. அதே சமயம் அவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து சமந்தா அக்கினேனி என்று தான் உள்ளது.
திடீரென டிஸ்பிளே பெயரை சமந்தா மாற்றியதற்கு எந்த காரணமும் அவர் தெரிவிக்கவில்லை. மேலும் கணவருடன் கருத்து வேறுபாடு, கணவரை பிரியப் போகிறாரா சமந்தா, இதற்கு ஆரம்பமாக தான் தனது பெயரை மாற்றி உள்ளாரா என்று ரசிகர்கள் குழபப்தில் உள்ளனர்.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் நடிகை சமந்தாவும் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் குணசேகர் இயக்கும் சாகுந்தலம், கேம் ஓவர் டைரக்வர் அஸ்வின் இயக்கும் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Kaathu Vaakula Rendu Kaadhal: காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் அப்டேட் ரெடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR