நடிகர் அருண் விஜய் தொடர்ச்சியாக வெற்றிப்படைப்புகளை தந்து கவனம் ஈர்த்து வருகிறார். அவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ’யானை’, திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக, ஓடிடியில் வெளியான ’தமிழ்ராக்கர்ஸ்’ தொடர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இரண்டு படைப்புகளும் ரசிகர்களிடத்திலும், விமர்சகர்களிடத்திலும் ஒருங்கே பாராட்டை பெற்றுள்ளது. அருண் விஜய்யின் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள், சினிமாத்துறையின் வர்த்தக வட்டாரத்திலும் பெரிய மதிப்பு உருவாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், அவர் அடுத்ததாக ‘பார்டர்’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை All in Pictures T. விஜயராகவேந்திரா தயாரித்துள்ளார். இயக்குநர் அறிவழகன் இயக்கியுள்ளார். “பார்டர்” என்ற படத்தின் தலைப்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின்  டிரெய்லரும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில், ‘பார்டர்’ திரைப்படம்  அக்டோபர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் அகில இந்திய திரையரங்க உரிமையைப் பிரபு திலக் என்பவர் பெற்றுள்ளார். இது குறித்து அவர் பேசும்போது, "அருண் விஜய் நடித்திருக்கும் ’பார்டர்’ படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி. நாங்கள் எப்போதும் சிறந்த திரைப்படங்களை தயாரித்து வெளியிடவே விரும்புகிறோம். 



சந்தேகத்திற்கு இடமின்றி, பார்டர் படம்  அனைத்து காரணிகளையும் ஒருங்கே  கொண்டுள்ளது . தனித்துவமான திரைக்கதைகள் மூலம் தமிழ் திரையுலகில் மதிப்பு மிக்கவராக போற்றப்படும்  இயக்குநர்  அறிவழகன், இப்படத்தில் உச்சம் தொட்டுள்ளார். நாங்கள்  இப்படத்தினை மிகப்பெரிய அளவில் வெளியிட  திட்டமிட்டுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார். இயக்குநர் அறிவழகன் எழுதி இயக்கியுள்ள  “பார்டர்” படத்தில் அருண் விஜய், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஸ்டெஃபி படேல் ஆகியோர் நடித்துள்ளனர். சாம் CS என்பவர் இசையமைத்துள்ளார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ