லிங்குசாமி இயக்கத்தில் வெளியான 'தி வாரியர்' திரைப்படத்தில் ராம் போத்தினேனி, ஆதி, க்ரித்தி ஷெட்டி, அக்ஷரா கவுடா, நதியா, ரெடின் கிங்ஸ்லி போன்ற பலர் நடித்துள்ளனர்.  ஜூலை-14ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் இந்த மாதம் வெளியாகுகிறது.  என்.ராகவன் இயக்கத்தில் குழந்தைகளுக்கான சிறந்த பொழுதுபோக்கு படமாக தமிழில் வெளியான படம் 'மை டியர் பூதம்'.  இந்த படத்தில் பிரபுதேவா, ரம்யா நம்பீசன், சம்யுக்தா மற்றும் அஷ்வந்த் போன்ற பலர் நடித்துள்ளனர்.  திரையரங்குகளில் வெளியான இந்த படம் தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.  மேலும் இதே ஓடிடி தளத்தில் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான 'யானை' படமும் வெளியாகவுள்ளது. இந்த படத்தில்  பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு, அம்மு அபிராமி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | புஷ்பா-2 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத்தால் வந்த ஆபத்து!


கிஷோர் என் இயக்கத்தில் சிபிராஜ் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகியோரது நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 'மாயோன்' படமும், அறிமுக இயக்குனர் சந்தீப் ஷாம் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான 'வேழம்' படமும் இந்த மாதம் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.  மேலும் இதே தளத்தில் விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமான 'டி பிளாக்' மற்றும் வினோத் இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளியான ரங்கா படமும் வெளியாகவுள்ளது.



ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படமான 'தி க்ரே மேன்' ஜூலை 22ம் தேதி நேரடியாக நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.  இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான தனுஷ் ஹாலிவுட்டில் கால் பதித்துள்ளார்.  தற்போது தனுஷ் இந்த படத்தின் புரமோஷன் பணிகளுக்காக லண்டலில் உள்ளார்.



மேலும் படிக்க | ஒரு பாடலுக்கு 25 நாட்கள் நடைபெற்ற பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ