உணர்ச்சிமிக்க வசனங்களுடன் வெளியானது ஜிப்ஸி Release Teaser!
ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகும் ‘ஜிப்ஸி’ படத்தின் வெளியீட்டு டீஸர் வெளியாகியுள்ளது.
ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகும் ‘ஜிப்ஸி’ படத்தின் வெளியீட்டு டீஸர் வெளியாகியுள்ளது.
பத்திரிகையாளராக இருந்து இயக்குநராக மாறிய ராஜுமுருகன் ’குக்கூ' படம் மூலம் தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர். இதையடுத்து ‘ஜோக்கர்’ என்ற படத்தை இயக்கிய அவர் தேசிய விருது வென்றதோடு, இரண்டே படத்தின் மூலமாக தமிழ் சினிமாவின் தரமான இயக்குநராக உயர்ந்துள்ளார்.
இதனையடத்து ராஜூ முருகன் தனது மூன்றாவது படமாக 'ஜிப்ஸி' என்ற திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார். ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இத்திரைப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளரும், மிஸ் இமாச்சல் பிரதேஷ் பட்டம் வென்றவருமான நடாஷா சிங் நடிக்கிறார். மாறுபட்ட தலைப்பை கொண்டு உருவாகும் இப்படத்தின் வெளியீட்டு டீஸரினை படக்குவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். வெளியீட்டு டீஸரின் தகவல் படி இத்திரைப்படமானது வரும் மார்ச் 6-ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீஸரில் இடம்பெற்றுள்ள உணர்ச்சிமிக்க வசனங்கள், கதைக்களம் போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும் என தெரிவிக்கிறது.
முன்னதாக இப்படத்தின் டீஸர், ட்ரைலர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. சாலை பயணத்தில் ஏற்படும் காதலை மையமாக கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது டீஸர் மற்றும் ட்ரைலர் மூலம் தெரிகிறது.
மதத்தை புறம் தள்ளும் காதல், கம்யூனிசம், சமூகநலம் என பல சாயல்களை இந்த படத்தில் நாம் எதிர்பார்க்கலாம் என்பது இந்த முன்னோட்டங்கள் மூலம் தெரிகிறது.